book

வெற்றிக்கான 5 படிகள்

Vettrikku Aindhu Padigal

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்ரமணி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :230
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184025989
Add to Cart

ஒருவனுக்குப் பணமும் பதவியும் கல்வியும் திறமையும் இருக்கலாம். ஆனால் அவன் தன்னடக்கம் இல்லாமல் வாழ்ந்தால் இவை யாவும் சோபிக்காமல் போய்விடுகின்றன. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முதற்படி, அடக்கமாக இருக்கப் பழகிக் கொள்வதுதான். தினமும் காலையில் எழுந்ததும் இறைவனிடம் அடக்கத்தை அருளுமாறு வேண்டிக் கொள்ளுங்கள். தினமும் இரவில் படுக்கப் போகும்போது, அன்று இறைவன் அருளால் கிடைத்த நன்மைகளை எண்ணிப் பார்த்து கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
2. உறுதியற்ற தன்மை உங்கள் பண்பைக் கெடுக்கிறது. உங்களால் உறுதியாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. எனவே உறுதியாகவும் மனோ திடத்துடனும் சிந்திக்கவும் செயற்படவும் பழகுங்கள். உங்களைப் பிறர் நம்பும் விதமாக, ஒரே விதமான நல்ல பண்புகளுடன் வாழுங்கள். அப்போது உங்களுக்குப் பிறருடைய அன்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கையின் வெற்றிக்கு இதுவே இரண்டாவது படி.
3. இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாதீர்கள். தள்ளிப் போடுவதும் தாமதப்படுத்தும் காரியத்தை முடிக்க உதவுவதில்லை. நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் பொறுப்பும் சிக்கலும் அதிகமாகிவிடும். நம்முடைய முயற்சியின் வேகமும் மங்கி, முன்னேற்றமும் தடைப்பட்டுப்போம். "நாளைக்கு செய்வேன்' என்றெல்லாம் சொல்பவன் எதையும் என்றைக்குமே செய்யமாட்டான். தாமதமின்றி உடனே முடிவெடுங்கள். அதை செயற்படுத்தத் தாமதிக்காதீர்கள். இதுவே மூன்றாவது படி.
4. பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதும் ஏராளமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதும் பேராசையாகும். இவை மன அமைதியைக் குலைக்கிறது. பேராசைக்காரர்களிடமிருந்து எல்லா விதமான நல்ல பண்புகளும் விடை பெற்றுக் கொண்டு போய் விடுகின்றன. பேராசையே பாவம் செய்யத் தூண்டுகிறது. ஆகவே, உங்களுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துங்கள். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையப் பழகிக் கொள்ளுங்கள். மன நிறைவுடன் அமைதியாக இருங்கள். இதுவே நான்காவது படி.
5. உங்களை நம்புங்கள். கடவுள் உங்களுக்கு அருளியுள்ள திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள்.