ஆளுமைத் திறன்
Aaalumai Thiran
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தயாநிதி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184027181
Add to Cartபல்வேறு சவால்களை உள்ளடக்கிய இன்றைய தொழில் யுகத்தில் தலைமைப் பண்புகளைக் கொண்ட ஒருவர் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார். ஆங்கிலத்தில் பர்சனாலிடி எனப்படும் ஆளுமையானது பல காரணிகளைப் பொறுத்தது. பிரச்னைகளின் மையத்தில் உள்ள ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார், அந்த சூழ்நிலைக்குப் பின் அவரோடு தொடர்புடைய மக்கள் மனதில் அவர் எப்படிப்பட்ட ஆளுமையை ஏற்படுத்துகிறார் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒருவரின் பர்சனாலிடி ஆனது தீர்மானிக்கப்படுகிறது.
உங்களது தோற்றம் மற்றும் மற்றவரிடம் உங்களைப் பற்றிய அபிப்பிராயம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் அக்கறை கொண்டவராக இருந்தால் பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். ஆள்பாதி, ஆடைபாதி என்பது நமது முன்னோர்கள் கூறிய பொன்மொழி. ஒருவரின் தோற்றத்தைத் தீர்மானிப்பதில் அவரது ஆடைகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. அதற்காக புத்தம் புதிய ஆடைகளைத் தான் உடுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் நல்ல சுத்தமான, தூய்மையான மற்றும் நன்றாகப் பொருந்தக் கூடிய ஆடைகளையே அணிய வேண்டும். நேர்முகத் தேர்வு போன்றவற்றுக்குச் செல்லும் போது பார்மல் எனப்படும் மரபை ஒத்த ஆடைகளையே அணிய வேண்டும்.