book

சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்

Ciththam thelivikkum chiththar civavakkiyar patalkal

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்ரியன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789388428309
Add to Cart

சித்தர்களிலே திருமூலரும், சிவவாக்கியரும் முதன்மை பெற்றவர்களாவர். சிவவாக்கியரின் பாடல்களில், சித்தர் சிந்தனைகள் யாவுமே மலருக்குள் இருக்கும் தேன் போல பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அவர் பாடல்களை ஆழ்ந்து படிப்பவர்கள் இதை அறிவர். மனம் தூய்மை இன்றிச் செய்யும் தெய்வ வழிபாடு பயன்தராது என்றவர். அன்பு, இரக்கம், தொண்டு ஆகியவற்றைக் கொண்டவர்களின் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை என்று கூறியவர். இவர் எழுதிய நூல் சிவவாக்கியம் ஆகும். சமுதாயத்தில் நிலவி வந்த சாதிமத வேறுபாடுகளைத் தம் பாடல்களால் வன்மையாகக் கண்டித்தார் சிவ வாக்கியர். இவருடைய பாடல்களில் பேச்சு நடை மேலேறி, இலக்கண நடை சற்றுத் தாழ்ந்து வந்து இரண்டும் சந்தித்துக் கூடுகிற தமிழ்நடையாக மிளிர்கிறது. சந்தம் இவர் பாடல்களில் சொந்தம் கொண்டாடுகிறது. சிவவாக்கியர் இறுதியில் கும்பகோணத்தில் சித்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது. இன்னும் பௌர்ணமி நாள்களில் கும்பகோணத்தில் அவர் சமாதியில் பூசை நடைபெற்று வருகிறது. சிவவாக்கியர் எழுதிய மொத்தப் பாடல்களாக ஒரு சில நூல்களில் 526 பாடல்கள் ஆகவும், 550 பாடல்களாகவும், 1012 பாடல்கள் ஆகவும் இடம் பெற்றுள்ளன. சிவவாக்கியர் எழுதியனவாக வைத்தியம் குறித்த பாடல்களையும், சோதிடம் குறித்த பாடல்களையும் சிலர் தம் பதிப்புகளில் இணைத்துள்ளனர். இவர் யோகம் சார்ந்த பாடல்களே இயற்றியுள்ளார் என்பது இவர் பாடல்களை ஆழ்ந்து கற்பவர் உணரலாம். வைத்தியம், சோதிடம் குறித்த பாடல்கள் இடைச் செருகல்களாக இருக்கலாம். சிவ வாக்கியரின் 550 பாடல்கள் உரையுடன் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.