book

பட்டாம்பூச்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானிட சாசனம்

Pattaam Poochi

₹399₹420 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :856
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788182010888
Add to Cart

ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலான் (Papillon) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த இந்த சுயசரிதை புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் ஜூன்.பி.வில்சன் & வால்டேர் பி. மைக்கேல் என்பவர்களால் 1970 இல் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனை உலகில் சக்கை போடு போட்டது. ரா. கி. ரங்கராஜன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு "பட்டாம்பூச்சி" குமுதத்தில் தொடராகவும் வெளியாகி வந்தது நூலாக வந்துள்ளது. சுமார் 800 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு. பட்டாம்பூச்சி படும் கஷ்டங்களும், அவனது தீராத சுதந்திர வேட்கையும், நண்பர்களிடையே அவனுக்குள்ள மிகுந்த செல்வாக்கும், துன்பங்களை அவன் எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் அவன் மன துணிவும், யார்க்கும் பணியாத அதே சமயம் யாரையும் பகைத்து கொள்ளாத அவன் சாமர்த்தியமும் நம்மை வியக்க வைக்கிறது. மொத்தத்தில் இந்த நூல் காதல், வீரம், சுதந்திரம், தத்துவம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய மிக சிறந்த காவியம். எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. தமிழிலிலும் மலையாளத்திலும் வந்த 'சிறைச்சாலை' படம் இந்நாவலின் தாக்கத்திற்கு உட்பட்டது. 'Papillon' என்ற திரைப்படமும் இந்நாவலில் இருந்து உருவாக்கப்படது