book

பாடு பாடு பண்பாடு பாடு

Paadu Paadu Panpaadu Paadu

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை.ஆ. கணபதி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :24
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048809
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Add to Cart

குழந்தைகளுக்கு மட்டுமல்ல சிறுவர்களுக்குக் கூடப் பெற்றோர் அல்லது பெரியோர் தான் உணவூட்டவேண்டும். சிந்தாமல் சிதறாமல் பிசைந்து அள்ளி உண்பதற்கு அவர்களுக்குத் தெரியாது. வாயினுள் கொண்டுபோகும் உணவையே உட்கொள்ள முடியாமல் தவற விட்டுவிடுவார்கள். சிறுவர் பருவம் பின் விளைவு உணராத பிஞ்சுப் பருவம். அந்த வயதில் உணவை ஊட்டுவதுபோல் நல்லுணர்வையும் ஊட்டவேண்டும். இளம் வயதில் பதியும் அறிவுரைகள் இறுதிவரை பயன்தரும். குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுகளை அறிமுகம் செய்கிறார். இரைச்சல் எரிச்சலை ஏற்படுத்துவதுடன் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவ்வாறு  பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆவன செய்யத் தூண்டுகிறார்.
போரின்  அழிவுகள், பயண நேரத்தில் பாதிப்பு ஏற்படுத்தாத செய்ல்பாடுகள், உழைப்பின் பயன்பாடுகள் , நல்ல புத்திமதிகள், நெசவுத் தொழிலின் அடிப்படைத் தேவை.  விளையாட்டினால் பெறும் நலன்கள், படிப்படியாக முன்னேற்றும் படிப்பின் முக்கியத்துவம், பிற உயிரினங்கள் கற்றுத்தரும் படிப்பினைகள் போன்ற அறிவுரைகளை இந்நூல் புகட்டுகின்றது.

                                                                                                                                                             - பதிப்பகத்தார்.