நீதியே வெல்லும்
Neethiyae Vellum
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart எப்படியும் மழை பெய்யும் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த மழை குழாய் வழியாக வருவதில்லை. ஆகாயம் என்னும் வெற்றிடத்தில் மேகங்கள் திரண்டு மழையாகப் பொழிகிறது. மொத்தத்தில் மழை பெய்யும் என்று மனித நம்பிக்கை வெற்றிடத்தில் தான் குவிக்கப்படுகிறது. நீதிக்கு வீட்டு எண், தெருப்பெயர் எதுவும் வந்து ஒருநாள் நடுத்தீர்ப்பு செய்யும். அந்த நீதி காலத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது.
இருளும் ஒளியும் சேர்ந்ததுதான் காலம். நீதி இருட்டுக்குள்ளும் ஒளிக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை உணராதவர்கள் அநியாயங்கள் செய்வதற்கு அஞ்சவே மாட்டார்கள். ஒலி இசையாகும் போது இனிமையாக இருக்கும். அதுவே ஓசையாகிப் பேரிரைச்சலாகும் போது காது வலிக்கும். வலி என்பதற்கு வடிவம் கிடையாது. அந்த ஒலி மனத்தினுள்ளோ, உடலினுள்ளோ புகுந்துவிட்டால் தாங்க முடியாது. அப்படி ஒரு வலிவராமல் இருக்க 'நீதியே வெல்லும் ' என்னும் மந்திரத்தை நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் கருத்து.
- ஆசி. கண்ணம்பிரத்தினம்.