book

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்

Narendra Modi Pudiya Irumbu Manithar

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்தன் நீலகண்டன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789351351658
Add to Cart

மோடியின் பெயரை உச்சரிக்கும்போதே வெள்ளமாகக் குவியத் தொடங்கும் ஆதரவும் புயல்போல் வலுத்து வரும் எதிர்ப்புகளும் நமக்குத் தெளிவாக உணர்த்தும் உண்மை ஒன்றுதான். மோடியை ஒருவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். நிச்சயம் புறக்கணித்துவிடமுடியாது.
இந்தியாவை வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் வலிமையும் மட்டுமல்ல, அதற்கான தெளிவான செயல்திட்டமும் மோடி-யிடம் உள்ளது என்று லட்சக்கணக்கானவர்கள் நம்பு-கிறார்கள். வெறும் நம்பிக்கை மட்டுமல்ல இது. குஜராத்தில் அவர் செயல்படுத்திக் காட்டிய அசாதாரண-மான சாதனைகள்மூலம் உருவான எதிர்பார்ப்பு.
இதுவரை அரசியலில் ஆர்வம் செலுத்தாத பெரும் திரளான இளைஞர்கள் மோடிக்குப் பின்னால் அணி-வகுத்து நிற்கின்றனர். எப்படி நிகழ்ந்தது இந்தப் பெரும் மாற்றம்? எதிர்ப்புகள், சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் அனைத்-தையும்-மீறி மேலும் மேலும் மக்களை மோடி வென்-றெடுப்பது எப்படி?
இந்திய அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தப்-போகும் மோடியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை இந்தப் புத்தகத்தில் தொட்டுப் பேசுகிறார் அரவிந்தன் நீலகண்டன்.