book

ஸ்ரீமத் பகவத் கீதை

Srimath Bhagavathgeedhai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. பெருமாள்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2011
ISBN :9798189796562
Add to Cart

இந்த அத்தியாயத்தில் பிரதானமாகப் பேச இருப்பது பக்தி. கர்மயோகத்தைப் போல் பக்தி ஒரு யோகம் அன்று. கீதை முழுவதிலும் ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் யோகம் என்று பெயர் கொடுக்கப்படுகிறது. யோகம் என்பது இங்கே ‘பேசப்படும் விஷயம்’ என்று புரிந்து கொள்ளவேண்டும்.
பக்தி என்ற சொல் ‘பஜ்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறக்கிறது. ‘பஜ் ஸேவாயாம்’ என்பர். ஸேவா என்பது ஸேவை. ஈச்’வர ஸேவை என்றும் ஈச்’வரனைச் ஸேவித்தல் என்றும் பொருள். எஜமானனுக்கு வேலையாள் வேலை செய்வதை அறிவோம், ஈச்’வரனுக்கு ஸேவை செய்வது எப்படி? ஈச்’வரன் யாருடைய உதவியையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் ஆள் அல்லர். தர்ம, அதர்ம சொரூபமாக இருப்பதுதான் ஈச்’வரம் என்று புரிந்து கொண்டு அதர்மத்தைத் தள்ளி, தர்மத்துடன் கடமை ஆற்றுவதே ஈச்’வரார்ப்பண புத்தி; அதுதான் கர்மயோகம்; இதுவே பக்தியோகமும் ஆகும்.