திகம்பரம்
Thigambaram
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் நாடன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788184463255
Add to Cartகடக்கக் கடக்கக் கடல் என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக்
கொண்டே இருந்தது கட்டுரை . எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது.
கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும்,
அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு
மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்
வாழ்க்கை - காலம் நிகழ்த்திய மாற்றங்கள் , நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ,
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை , காவலன் காவான் எனின் , தீதும்
நன்றும் வரிசையில் எனது 6ஆவது கட்டுரை நூல் இது - திகம்பரம் ! ஒரு
வார்த்தையில் சொன்னால், திகம்பரம் எனில் நிர்வாணம். தீவிர நுண்ணிய
வாசிப்பைப் பெறுவது , எந்தப் படைப்புக்கும் கர்வம், தவம். அவை கிட்டுமாயின்
மகிழ்வு.