book

மறுபக்கம்

Mrupakkam

₹600
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :751
பதிப்பு :4
Published on :2019
ISBN :9788123417325
Add to Cart

“மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய  ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்வைக்கும் நாவலாக - எனப்  பலவிதமாகவும் வாசிப்புக்கு உட்படுத்த முடியும். நாவலில் வரும் தேவகிருபை என்பவர் கூறுவார்; “வரலாற்றுக்குள்ளே தேடு, அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய் விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்”. எதைத்  தேடுவது. எப்படித் தேடுவது என்று நமக்குக் காட்டும் ஒளிவிளக்கு இந்நாவல்!