கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம்
Koteeswararin Aazhmana Rahasiyangal
₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. ஹார்வ் ஈக்கர்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184027174
Add to Cartஎவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிக்கையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும். ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்துகொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு - தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன், ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறிவிட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க.இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்படத் தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது. ஆனால், அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும். நிறைவேறப் போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும். ஆழ்மனக்கட்டளையை குறிக்கோளுக்கும்.