book

தாணு ஜோக்ஸ்

Dhanu Jokes

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாணு
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :91
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788189780357
குறிச்சொற்கள் :நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு
Out of Stock
Add to Alert List

நாட்டு நடப்புகளை ஓவியங்களாகப் பதிவு செய்வதுதான் ஒரு பத்திரிகை ஓவியரின் கடமை. அதையே, சமூகக் கோபத்தோடு சொல்லும்போது கார்ட்டூன் ஆகிறது; நையாண்டியோடு சொல்லும்போது நகைச்சுவையாகிறது.
இந்த இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்வது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். ஏனென்றால், நகைச்சுவைத் துணுக்குக்கு நடுவே சீரியஸாக கார்ட்டூன் முகம் எட்டிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இரண்டு தூரிகை வைத்துக்கொண்டு எழுதியதுபோல் அரசியல் கார்ட்டூன்களையும் நகைச்சுவைத் துணுக்குகளையும் கோடு போட்டு பிரித்துக் கொண்டு அசத்தியவர் தாணு. காலத்தின் கோலத்தைப் பிரதிபலிக்கும் விதமாக பல நகைச்சுவைத் துணுக்குகளைத் தந்திருக்கிறார் தாணு.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, விகடனை விட்டு விலகி முழுநேர கார்ட்டூனிஸ்ட் ஆக பல பத்திரிகைகளில் பணிபுரிந்தாலும், தன்னுடைய பொற்காலம் விகடனில் இருந்த காலம்தான் என்கிறார் இப்போதும். இப்படிப்பட்ட ஓவியர்களையும் கார்ட்டூனிஸ்ட்களையும் பெற்றிருப்பதுதான் விகடனின் வரம்! தாணுவின் நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்துப் பார்த்தபோது, ஒரு சுவாரஸ்யமான உலகத்துக்குள் உலவி வந்ததுபோல சந்தோஷமாக இருந்தது.

நீங்களும் இந்த உலகத்துக்குள் உலவிப் பாருங்கள், உங்களுக்கும் அந்த சந்தோஷ உணர்வு கிடைப்பது நிச்சயம்!