book

2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு

2011: Sarvathikarathilirundu Jananayagathuku

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184936445
Add to Cart

"எண்ணெய் வளம் கொழிக்கும் வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு தேசங்கள் அனைத்திலும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தீவிரமான புரட்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். துனிஷியாவிலும் எகிப்திலும் அசைக்கமுடியாத ஆட்சியாளர்களாகப் பல்லாண்டு காலம் கோலோச்சியவர்கள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். லிபியாவில் புரட்சி அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மக்களுக்கு எதிராக லிபியத் தலைவர் கடாஃபி கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கொலைவெறி வன்முறை சர்வதேச அளவில் மிகப்பெரிய கண்டனத்தைப் பெற்றிருக்கிறது. லிபியத் தலைவர் எந்தக் கணமும் நாட்டைவிட்டு ஓடிவிடக்கூடிய நிலையில் இருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல. பத்தொன்பது நாடுகளில் ஒரே சமயத்தில் மக்கள் புரட்சி வெடித்திருக்கிறது. உலக சரித்திரத்தில் இது முதல்முறை. பணக்கார தேசங்கள் என்று பொதுவில் வருணிக்கப்படும் இம்மாபெரும் எண்ணெய் வள பூமிக்குள் எத்தனை அழுக்குகள், ஊழல்கள், அராஜகங்கள், மக்கள் விரோத நடவடிக்கைகள் நடைபெற்று வந்திருக்கின்றன என்பது இப்போது வெளியே வரத் தொடங்கியிருக்கிறது. எண்ணெய் தேசங்களில் எள்முனையளவு பிரச்னையென்றாலும் அது உலகையே பாதிக்கும். இந்த பிரம்மாண்டமான புரட்சிகளின் விளைவு என்னவாக இருக்கப்போகிறது? திகைப்பூட்டக்கூடிய, திடுக்கிடச்செய்யக்கூடிய, பதறவைக்கக்கூடிய உண்மைகளை, புரட்சியின் பின்னணியுடன் வரிசைப்படுத்துகிறது இந்நூல்."