book

தேவியின் திருவடி

Deviyin thiruvadi

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஷ்யபன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780234
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பிரார்த்தனைகள்
Add to Cart

இன்பமான தருணங்களில் குடும்பத்தோடு ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டு, அந்த இன்பத்தை அதிகப்படுத்திக் கொள்வதும், துன்பம் நேரும்போது கடவுளை நாடி, அந்தத் துன்பத்திலிருந்து மீள வழிவகை செய்வதும் மனித இயல்பு.
அந்த வகையில், நமக்கு இன்னல் உண்டாகும்போதெல்லாம் அம்மனையே நம் கரங்கள் தொழுகின்றன. அதற்குப் பலனும் கிடைப்பது நிச்சயம். நம் பிரச்னைகள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதனை உடனடியாகப் போக்க வழிவகை செய்வதால்தான், அவளை 'சக்தி' என்று அழைக்கிறோம்.

இத்தகைய சக்தி கொண்ட தேவி, வெவ்வேறு தோற்றங்களில் பல்வேறு பெயர்களுடன் நாட்டின் பல இடங்களில் குடிகொண்டு இருக்கிறாள். ஒவ்வொரு தேவியின் பின்னணியிலும் உள்ள கதையை எளிமையாகவும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையிலும் பக்தி இலக்கியமாகப் படைத்துள்ளார் காஷ்யபன். பன்னிரண்டு தேவியர்களின் தல வரலாறு மற்றும் சிறப்புகளை சுவாரசியமான நடையில் எழுதியுள்ளார். அனைத்து தேவியரையும் நாடிச் சென்று அவளது திருவடிகளை வணங்குவது போன்ற அனுபவத்தை உண்டாக்குவதே இந்தப் புத்தகம்.

எந்தெந்த தேவியரை வழிபட்டால் என்னென்ன வேண்டுதல்கள் நிறைவேறும், தலம் அமைந்திருக்கும் இடம், செல்லும் வழி, தங்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் துல்லியமாகத் தரப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு.

தேவியின் திருவடிகளை நம் விழிகளால் தரிசிக்கத் துணைபுரிந்துள்ளன ஜெ.பி&யின் பக்திபரவசமான ஓவியங்கள்.

வாருங்கள், தேவியின் அருளை அள்ளிப் பருகுவோம்; ஆன்மிக அனுபவம் பெற்று உருகுவோம்..!