book

அண்ணல் காந்தி சில நினைவுகள்

Annal Gandhi Sila Ninaivugal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. நஞ்சுண்டன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417098
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

அண்ணல் காந்தி சில நினைவுகள் ; அக்டோபர் மாதம் காந்தியடிகளின் பிறந்த மாதமாக இருப்பதால் - அண்ணல் காந்தி- சில நினைவுகள் ' என்ற தலைப்பில் 31 நாட்களும் தாங்கள்  காந்தியடிகளின் வாழ்க்கையில்  சில முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிட்டும், அவரது  எண்ணங்களைப் பிரதிபலிக்கும் எழுத்துக்களை தொகுத்தும் நீங்கள்  பேசவேண்டும்  என்று கேட்டுக்கொண்டார். இதைச் சொல்லி முடிக்கும் பொழுது வானொலியில் பாரதியின் 'வாழ்க நீ எம்மான் ' என்ற பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அன்று எனக்கு ஏற்பட்ட மகிழ்விற்கும் உணர்ச்சிகளுக்கும்  எல்லையே  இல்லை. காந்தியடிகளின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் அவரது 'சத்திய சோதனை 'என்ற நூலில் சொல்லப்பட்டிருந்தது. இது தவிர காந்தியடிகளின்  பேச்சுக்கள் -தொகுப்பு நூலாக வந்திருந்தது. தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த சம்பவங்கள் பலவற்றை 'மாந்தருக்குள்  ஒரு தெய்வம் 'என கல்கியும் அவினாசிலிங்கம் ஐயா அவர்களின் 'தமிழ்நாட்டில் காந்தி ' என்ற நூலிலும் மேலும் எங் இந்தியா , ஹரிஜன் ஆகிய த்திரிகைகளிலும் காந்தியின் எழுத்துக்கள் வந்துள்ளன.இவைகளிலிருந்து எப்படித் தொகுத்து சம்பவங்களை கொடுக்க முடியும் -படிக்காமல் - அவரது போதனைகளை எவ்வாறு எழுத முடியும்  என்று எண்ணி கால அவகாசம்  இருக்குமா  என்று கேட்டேன். முதலில்  5 நாட்களுக்கு எழுதிக்கொடுங்கள் பின்னர் தொடர்ந்து எழுதலாம் என்று திரு. செல்வம் சொன்னவுடன் தான் நான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட தமிழ் , ஆங்கில நூல்களைப் படித்தேன் . எந்தெந்த சம்பவங்களைச் சொல்லுவது என்று குறிப்பு எடுத்துக்கொண்டு 30 நாட்களுக்கும் வெவ்வேறான நிகழ்வுகளை  எடுத்துக்கொண்டு, இத்தொடரை முடித்தேன். வானொலியில் இவை ஒலிபரப்பான   பொழுது தினமும் இதனைப் பாராட்டி பல கடிதங்கள் வந்ந வண்ணம் இருந்தன.

                                                                                                                                      ஆசிரியர்   நா . நஞ்சுண்டன்