book

போட்டிவேதக்கதைப்பாடல்கள்

Pottivedhakathai Paadalgal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. ஐசக் அருள்தாஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411071
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு, வேதக்கதைப் பாடல்கள்
Add to Cart

போட்டி வேதக்கதைப் பாடல்கள் நாட்டுப்புறவியலின்  தோற்றமு, மலர்ச்சி, நாட்டுப்புற இலக்கியத்தின் வகைகள், இயல்புகள்
என விரிவான அறிமுகத்தோடு நூல் தொடங்குகிறது. நாட்டுப்புறப் பாடல்கள் சாமானிய மனிதனுடைய உணர்வுகளின் பிரதிபலிப்பு. அவனுடைய உள்ளக்குமுறல்கள், உணர்வுப் பேரலைகள் சமூக்க்கோபம், அடுத்திருப்போரிடமுள்ள உறவு, இவைகள் இயற்கையாக மெருகேற்றாத மொழியில், ஆனால் ஒரே நேரத்தில் மென்மையாகவும், அழுத்தமாகவும் வெடித்துக் கிளறும் ஊடகம் தான் நாட்டுப்புறப்பாடல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், செவ்விலக்கியத்தின் ஆன்மாவும், உள்ளடக்கமும் நாட்டுப்புற இலக்கியம் தான்.

கதைப்பாடல்கள்,வில்லுப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், தாலாட்டுப்பாடல்கள் ஒப்பாரிகள் போன்ற இவைகள் எல்லாம் மிகச் சாதாரணமாக மக்கள் மத்தியில் உலா வந்த நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள்.ஏட்டிக்குப்  போட்டி பேசுவதும், கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வதும் ஒருவர் கருத்துக்கு எதிர்க்கருத்து வைப்பதும் ஆகிய இவற்றை ஓர் இலக்கிய உத்தியாக்க் கொண்டு வெளியிடப்பட்டவை போட்டிப்பாடல்கள்.

                                                                                                                                      -பதிப்பகத்தார்.