-
தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்துமுடிக்க முடியுமென்று நம்புவதும், நம்பிக்கையைச் செயல்படுத்த திட்டமிடுவதும், அதை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்துவிடாமல், விடாமுயற்சியுடன் அந்தக் காரியத்தைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேறுவதும்தான் தன்னம்பிகை. தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழி காட்டும் ஒளிவிளக்கு. “ஒல்வது அறிவது அறிந்து அதன்கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்” – திருக்குறள் ஒருவர் தன் வலிமைக்கு ஏற்றதை அறிந்து, அதில் உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாதது எதுவும் இருக்காது. “முயன்றால் முடியாதது எதுவும் இல்லை”, “முயற்சி திருவினை ஆக்கும்”, முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்” என்பவைகள்தான் தன்னம்பிக்கையின் மூல மந்திரங்கள் ஆகும். பொதுவாக கால்நடைகள் குட்டிகளை ஈன்றவுடன் பிறந்த குட்டிகள் தடுமாறி எழுந்து நின்று தன்னம்பிக்கையுடன் நடக்க ஆரம்பித்துவிடுகின்றன. அதுபோல் பறவையினங்களின் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் நடக்க ஆரம்பிக்கின்றன. மனிதனின் குழந்தைப்பருவத்தில் நடக்க ஆரம்பிக்கும்போது முதலாவது அடி எடுத்துவைக்கும் போதே விழுந்துவிடுவோம் என்ற பயஉணர்வை மீறி அடி எடுத்து வைக்கின்றான். அப்படிப்பட்ட குழந்தையை ஓரடி ஈரடியாக காலடி எடுத்துவைக்கச் சொல்லி அக்குழந்தையின் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டி உன்னால் நடக்க முடியும் என்று நடை பயில வைப்பதிலும் பேச கற்றுக்கொடுப்பதிலும் காணலாம்.
-
This book Thannambikkai is written by Vimalanath and published by Kannadhasan Pathippagam.
இந்த நூல் தன்னம்பிக்கை, விமலநாத் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thannambikkai, தன்னம்பிக்கை, விமலநாத், Vimalanath, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Vimalanath Suya Munnetram,விமலநாத் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Vimalanath books, buy Kannadhasan Pathippagam books online, buy Thannambikkai tamil book.
|
இ வான்ட் திஸ் பூக்