book

வியர்வைத்துளிகள்

Vyarvaithuligal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவி.வெ. நாரா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414133
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, வியர்வைத் துளிகள்
Add to Cart

வியர்வைத் துளிகள் ; துளிகள்தான் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டியிருக்கின்றன. மழைத்துளிகள் மண்ணை
வளப்படுத்துகின்றன. விந்துத் துளிகள் உயிரினங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்து வினையாற்றிக்கொண்டிருக்கின்றன. வியர்வைத்துளிகளிகள் உழைப்பின் உதிரங்களாக வெளிப்படுகின்றன. இந்நூலுக்கு வியர்வைத்துளிகள் என்று பெயர்சூட்டி கவி.வெ.நாரா அவர்கள் பல கருத்துகளைப் பாய்ச்சுகிறார் பொதுத்தொண்டில் ஈடுபட்டு புகழ்பெற்ற கவி.வெ.நாரா அவர்கள் கவிப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.  உழவனின் உழைப்பில், அவன் உதிர்க்கும் வியர்வையில் தமிழைக் கண்டதாகவும் அதை அள்ளி உண்டதாகவும் உரைக்கிறார். சத்தியத்தைப் பணம் தரையில் போட்டுத் தேய்க்கிறது என்றும், ஏழைகளின் இரத்தத்தைச் சுவை பார்த்துக் குடிக்கிறதென்றும் கொதிக்கிறார். பக்தி என்ற பெயரால் உங்கள் சுயநலக்குப்பைக் கூளங்களைத் தோண்டாதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். சித்தர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் சொல்லிவைத்த அறநெறிகளால் தன்னலம் அழிந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறார். உழைப்பாளர்களின் கைகள் சுரபிக்கைகள் என்றும் உதவி செய்வதற்கென்ற வளர்ந்துள்ள வள்ளல் கைகள் என்றும்
உழைக்கும் கரங்களுக்கு வரம் கொடுக்கும் பாடல் உயிரோட்டமானது.  நாட்டில் எல்லை வெறி, இனவெறி , ொழிவெறி,மதவெறி போன்ற வெறிகள் இல்லாத பாரத நாடு தோன்ற ஒற்றுமை தேவை என்று ஊட்டப்படுகிறது. தன்னலப் பயிர் சாய்ந்தால்தான் பொது நல உயிர் துளிர்க்கும்.

                                                                                                                                                   - பதிப்பகத்தார்.