-
செஸ் தொடங்கி இந்தியா உலகத்துக்குக் கொடையாகக் கொடுத்த விளையாட்டுகள் ஏராளம். எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி இன்று நம் நாடு முழுவதிலும் எட்டமுடியாத உயரத்தில் நிற்கும் மேஜிக் விளையாட்டு _ கிரிக்கெட்! விறுவிறுப்புக்கு ஒருநாள் ஆட்டம் என்றும் நுணுக்கத்துக்கும் விஸ்தாரத்துக்கும் ஐந்து நாள் டெஸ்ட் மேட்ச் என்றும் சளைக்காமல் பார்த்து வருகிறோம். இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில்கூட செல்வாக்கு செலுத்தவல்லதாகிவிட்டது கிரிக்கெட்!
இந்த ஆட்டத்தில் கிரீடம் தரிக்காத எத்தனையோ மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரின் சாதனைகளையும் முறியடிக்கவல்ல திறமைகொண்ட சக்கரவர்த்தியாகத் திகழ்பவர் இளைஞர் சச்சின் டெண்டுல்கர்!
உலக அளவில் பிரபலமான இந்தியர்கள் வரிசையில், மிக இளம் வயதிலேயே அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்ட சச்சின், சுட்டிகளின் காவிய நாயகன். 'இவரைப் போல நாமும் சாதிக்க வேண்டும்' என்கிற லட்சியத்தை இளம் மனங்களில் விதைத்த கிரியா ஊக்கி.
சச்சின் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்கள், திருப்புமுனையாக அமைந்த ஆட்டங்கள், அவர் முறியடித்த சாதனைகள் என்று எல்லாவற்றையும் தொகுத்து ஒரு தொடராக சுட்டி விகடனில் வெளியிட ஆசைப்பட்டோம்.
'சிகரம் தொட்ட சச்சின்!' என்கிற தலைப்பில் வெளிவந்த கட்டுரைத் தொடர் இதோ, இப்போது புத்தகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது. உத்வேகம் ஊட்டும் அவரது வாழ்க்கை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
-
This book Sigaram thotta sachin is written by Ramesh vaithya valli and published by Vikatan Prasuram.
இந்த நூல் சிகரம் தொட்ட சச்சின், ரமேஷ் வைத்யா, வள்ளி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sigaram thotta sachin, சிகரம் தொட்ட சச்சின், ரமேஷ் வைத்யா, வள்ளி, Ramesh vaithya valli, Vilayattu, விளையாட்டு , Ramesh vaithya valli Vilayattu,ரமேஷ் வைத்யா, வள்ளி விளையாட்டு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ramesh vaithya valli books, buy Vikatan Prasuram books online, buy Sigaram thotta sachin tamil book.
|
i லவ் சச்சின்