book

புது வழியைத் தேடுங்கள்

Pudhu vazhiyai thedungal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.பி. வாஸ்வானி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

ஒரு சமயம் ஓர் அன்பர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை அணுகி, கர்மா என்றால் என்ன? அதிலிருந்து விடுதலை கிடைக்குமா? என்று கேட்டார். சிறிய கதையின் மூலம் பரமஹம்சர் அதை விளக்கினார். கடலில் வலையை விரித்து செம்படவன் ஒருவன் மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ‌வலை பளுவாகவே செம்படவன் மகிழ்ந்து வலையை இழுக்கத் தொடங்கினான். வலையில் சிக்கிய மீன்கள் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்தன. சில மீன்கள் வலையில் இருந்து துள்ளி வெளியே விழுந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டே இருந்தன. இன்னும் சில மீன்கள் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் வலையிலேயே சுகமாய்த் தங்கிக் கொண்டன. இன்னும் சில அதிர்ஷ்டசாலி மீன்கள் வலையிலேயே அகப்படவில்லை. வலையைச் சுற்றி அவை சுதந்திரமாக நீந்திக் கொண்டிருந்தன. மனித வாழ்க்கை நான்கு வகைப்படும். வலையில் சிக்ககாமல் சுற்றித்திரியும் மீன்களைப் போன்று சிலர் இருப்பார்கள். அவர்களை நித்ய முக்தா என்று அழைக்கிறோம். எந்தக் கர்மாவும் அவர்களைப் பாதிக்காது. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் முக்தா என்றழைக்கப்படுவார்கள். கர்மாவில் சிக்கிக் கொண்டாலும் தங்கள் முயற்சியினாலும் இறைவன் அருளாலும் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து விடுவார்கள். மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள் கர்ம வினைகளில் இருந்து விடுபடத் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசி நான்காம் வகையைச் சேர்ந்தவர்களூக்கு கர்மா, கர்ம பயனால் ஏற்படும் தாக்கம் ஆகியவை எதுவுமே தெரியாதவர்கள். செம்படவன் வலையில் னீழ்ந்தால் நிகழப்போகும் விபரீதம் தெரியாமல் வலையிலேயே முடங்கிக் கிடக்கும் மீன்களுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?