book

சூஃபி கதைகள்

Sufi Kadhaigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நரியம்பட்டு எம்.ஏ. சலாம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184025088
Out of Stock
Add to Alert List

யாசகர் ஒருவர் பள்ளிவாசலின் முன் அமர்ந்து கொண்டு பிச்சை ‌கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக சில செல்வந்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கியும் கைக‌ளை ஏந்தினார். எவருமே ஒரு செல்லாக்காசும் போடவில்லை. சென்று கொண்டிருந்த செல்வந்தர்களில் ஒருவரின் சட்டைப் பையில் இருந்த தினார்கள் நிரம்பிய பையொன்று தவறிக் கீழே விழுந்து விட்டது. அந்தப் பையில் 500 தினார்கள் அடங்கி இருந்தன. அதைக் கண்ட அந்த யாசகர் அப்பையை எடுத்து வைத்துக் கொண்டார். சற்று நேரத்திற்குப் பிறகு அந்த செல்வந்தன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடோடி வந்தான். அங்கும் இங்கும் பார்வையைச் செலுத்தினான். நீங்கள் தேடுவது இந்தப் பையைத் தானே? என்று அந்தப் பையைக் காட்டி யாசகர் கேட்டார். அதைப் பாய்ந்து பறித்துக் கொண்ட செலவந்தன் சந்தோஷம் மிகுதியால் ஆம் இதே பையைத்தான் நான் தேடிவந்தேன். இதில் ஐந்நூறு தினார்கள் இருக்குமே? என்று பையைத் திறந்து பார்த்தான். எல்லாம் சரியாக இருந்தது. இதோ பதினைந்து தினார்களை வைத்துக்கொள், பரிசாக என்று செல்வந்தன் பணத்தைக் கொடுக்க, அதை வாங்க மறுத்துவிட்ட யாசகர் கூறினார்: நீ பரிசாகத் தரும் உன் பணம் எனக்குத் தேவையில்லை. நான் முதலில் கேட்டது தருமம். நீ இப்போது தருவதோ பரிசு.