book

பலரது பார்வையில் கண்ணதாசன்

Palarathu paarvaiyil Kannadhasan

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

வாழும்போது வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்கள், மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள், அவர்களில், தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னத கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். காலத்தால் அழியாத காவியங்களாக தன் திரைப்படப் பாடல்களில் கரைத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட அந்த மாபெரும் கவிஞனின் நினைவு நாள் இன்று.. அந்த தன்னிகரில்லா கவிஞனை தமிழர்கள் நினையாத நாள் என்று? கண்ணதாசன் என்ற தமிழ் காவியத்தை அவரது நினைவுநாளில் புரட்டிப்பார்க்கிற ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பாக எனக்கு தெரிந்ததை உங்களுக்காக..
முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல்மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன். ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர்.