book

அலையோரம்

Alaiyoram

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் பி.டி.சாமி
பதிப்பகம் :தமிழன் நிலையம்
Publisher :Tamilan Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத வீதி அது. ஆனால், காலை ஒன்பது மணியிலிருந்து பத்து மணி வரையிலும், மாலை நான்கு மணியிலிருந்து ஐந்து மணி வரையிலும் அந்தத் தெரு கலகலப்பாக இருக்கும். அந்தத் தெரு சில பள்ளி களுக்கும் கல்லூரிக்கும் போகும் வழியாக அமைந்து விட்டதால் குறிப்பிட்ட நேரத்தில் சந்தடியற்ற நிலை எங்கோ பறந்தோடிவிடும். அன்று - பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகும் போகும் மாணவர்கள் வழக்கம்போல் காலையில் சென்று கொண்டு இருந்தனர். மாணவர்களைவிட மாணவிகள்தான் கூட்டம் கூட்டமாகப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் நடந்து சென்றனர். அவர்கள் அணிந்து செல்லும் வண்ண ஆடைகள், கையில் 'லேடஸ்ட் பாஷனாக' பிளாஸ்டிக் கூடையைத் தாங்கிச் செல்லும் காட்சி, வீட்டு வாயிற் படியில் நின்றிருந்த சாரதாவுக்குத் தன் பள்ளிப் பருவ வயதை நினைவுபடுத்தியது.