book

மனமும் மனிதனும்

Manamum Manithanum

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :6
Published on :2015
Add to Cart

மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளிகையின் மைய மண்டபம். அதனால்தான் 'மனஸ்' என்பதிலிருந்து 'மனுஷன் உருவானான். 'எப்போதும் மனிதன் எதை இடைவிடாமல் எண்ணுகிறானோ அவன் அதுவாகவே ஆகிறான்' என்கிறது உபநிடதம். "தேஜோ மயோ தேஜோ மய: காம மயோ காம மய: க்ரோத மயோ க்ரோத மயோ : தர்ம மயோ தர்ம மயஸ்." ஒளியைப் பற்றிச் சிந்திப்பவன் ஒளிமயமாவான். காம நினைவுகளில் மூழ்கியவன் காமுகனாவான். இதயத்தில் கோபத்திற்கு இடம் கொடுத்தவன் கோபியாவான். தர்மத்தையே எண்ணிக் கொண்டிருப்பவன் தர்மனாவான்' என்கிறது பிருஹதாரண்ய உபநிஷதம்.