book

என் கதை ஹெலன் கெல்லர்

En Kathai

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: மு. சிவலிங்கம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :310
பதிப்பு :4
Published on :2010
ISBN :9788184022285
Add to Cart

அதிசயமே அதிசயித்துப்போகும் அசாத்திய சாதனைக் கதை, இது! பிறந்த 19 மாதங்களி‌லேயே, பேசுகிற, பார்க்கிற, கேட்கிற சக்தியைப் பறிகொடுத்து விட்ட ஒரு பச்சைத் தளிர், அனைத்துத் திறமைகளுடன் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, விருட்சமாய் உயர்ந்த வெற்றிக்கதை! பொழுது விடிவதற்குள் செத்துப்போய்விட வேண்டும் என்ற கொடிய வேதனையில் வதைபட்ட 12 வயதுக் குழந்தை, எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் போராடிப் போராடி முன்னேறிய சாகசக் கதை, என் கதை! கொட்டுகிற தண்ணீருக்கடியி்ல கையை வைத்து எழுதப்பட்ட வாட்டர் என்ற ஊற்றுக்கண் திறந்ததும், அத்தனை சந்தோஷங்களுடனும், ஞானப் பேரொளியுடனும் ஒரு புத்தம் புது உலகத்தை வசப்படுத்திக் கொண்ட அதி அற்புதக் கதை, இது! கொடிய நோய் பறித்துவிட்ட பேச்சுத் திறனை, பகீரத முயற்சியால் மீட்டுக் கொண்ட, ஒரு குழந்தையின் உருக்கமான போராட்டக் கதை! ஓர் ஆசிரியர், அன்போடும் அக்கறையோடும் கற்றுக் கொடுத்தால், எப்படிப்பட்ட குழந்தையையும், நம்ப முடியாத, கற்பனைக்கு அப்பாற்பட்ட எந்த சாதனையை வேண்டுமானாலும் நிகழ்த்த வைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள நிஜக்கதை! தன்னம்பிக்கை, சிரத்தை,விடாமுயற்சி, முனைப்பு, துணிச்சல், ஆர்வம், ஊக்கம், விவேகம், உத்வேகம், உற்சாகம், அன்பு, பரிவு, நேசம், பாசம், தேடல் தாகம்... என்ற அத்தனையின் மறுபெயர் ஹெலன் கெல்லர் என்பதை நம்மை உணர வைக்கும் உன்னதப் படைப்பு, என்கதை!