book

முயல் வளர்ப்பு

Muyal Valarpu

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.த.ரவிமுருகன், டாக்டர்.ந. குமாரவேலு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

முயல் வளர்ப்பு முறைகள் முயல் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. முயல் வளர்ப்பதற்கு அன்றாடம் வீணாகும் காய்கறிகளும், தோட்டத்து இலைகளும் போதும். முயல் ஒரு வருடத்தில் ஆறு முறை குட்டிகள் போடும். ஒவ்வொரு முறையும் 6 முதல் 8 குட்டிகள் போடும். இதன் சினைக்காலம் 30 நாட்களாகும். முயல்கள் பசும்புல் வகை, முளைவிட்ட பயறு வகையான சுண்டல், கடலை, முழு தானியங்கள், புண்ணாக்கு, காய்ந்த அருகம்புல், மர இலைகளான சூபாபுல், அகத்தி, கல்யாண முருங்கை முதலியவற்றை உண்ணும். இரண்டு கிலோ எடை உள்ள முயல் 750 கிராம் எடையுள்ள பசுந்தழைகளை சாப்பிடும். வளரும் முயல்களுக்கு 25 கிராம் கலப்புத் தீனி தினமும் கொடுப்பது அதன் வளர்ச்சியை பெருக்க உதவும். அவை வசிக்க 1 1/2 முதல் 2 சதுர அடி மரக் கூண்டுகளே போதும். சிறிய முயல் குட்டிகள் பிறந்த 15 நாட்களுக்குப் பின் இலேசாகப் புல் கடிக்க ஆரம்பித்து 4 முதல் 6 வாரத்தில் தாங்களே சுயமாக வாழ பழகிக் கொள்கின்றன. குட்டிகளை 6 வாரத்தில் தாயிடமிருந்து பிரித்த பின் தாய் முயலை சினைப்படுத்தலாம். இரண்டு ஆண் முயல்களையும், மூன்று பெண் முயல்களையும் முதலில் பராமரித்து நல்ல இலாபம் பெறலாம். வேளாண்மை முத்துக்கள் அருகிவரும் பண்டைய பயிர் ரகங்கள்