book

ரோஜா வளர்ப்பு முறைகள்

Roja valarppu muraikal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலா கலைச்செல்வன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :211
பதிப்பு :2
Published on :2004
Out of Stock
Add to Alert List

மனம் மயக்கும் வாசனையுடன் விதவிதமான வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளை விரும்பாதவரில்லை. இருப்பினும் முட்கள் நிறைந்த ரோஜா செடியை நல்ல முறையில் வளர்த்து பராமரிப்பது சாதாரண விஷயமில்லை. எல்லா தோட்டக்கலை ஆர்வலர்களுமே ரோஜா செடியை வளர்ப்பு என்பது சிரமமான ஒன்று என்பதை ஒப்புக்கொள்கின்றனர். ஒல்லியான பலவீனமான தோற்றத்தை கொண்டுள்ள இந்த செடிக்கு தேவைப்படும் உபசரிப்பு கொஞ்ச நஞ்சமில்லை. இருப்பினும் சிரமம் பார்க்காமல் விசேஷமாக கவனித்து கொள்ளும் பட்சத்தில் நமது தோட்டத்திலோ வாசலிலோ பல வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளுக்கு நாம் சொந்தக்காரர்கள் ஆகிவிடலாம். அதிலும் "தோட்டத்தை நல்லா வச்சிருக்கீங்க" என்று யாராவது உங்களை பாராட்டினால் அது உண்மையில் ரோஜா மலர்களை பார்த்து சொல்லப்படுவதாகத்தான் இருக்கும்.
எல்லாம் சரிதான், பார்த்தவுடனேயே நம் மனதை கொள்ளும் இந்த அற்புத ரோஜா செடிகளை செழிப்பாக மலர்ந்து சிரிக்கும்படி வளர்ப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லையே. தொட்டியில் வளர்த்தாலும் சரி, தோட்டத்தில் வளர்த்தாலும் சரி, ரோஜாச்செடிகள் பளிச்சென்று பூத்து ஜொலிக்கும்படி வளர்த்தெடுப்பது உண்மையிலேயே ஒரு பெரிய சவால் இல்லையா? நர்சரியிலிருந்து ஆசை ஆசையாக வாங்கி வந்து அவசர அவரசரமாக தொட்டியில் வைத்து தினமும் நீருற்றி - பதினைந்து நாள் கழித்து வறண்டுபோன இலைகளுடன் அது பரிதாபமாக காட்சியளிப்பதை பார்த்தால் எப்படியிருக்கும்? சிலருக்கு கோபம் வரும்; சிலருக்கு அழுகை வரும். அது போகட்டும், அந்த மாதிரியான ஏமாற்றங்களை தவிர்க்கவும்,