-
ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார். சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் ஏராளமான மாணவர்களுக்கு சமஸ்கிருத உயர்கல்வி போதித்து வருகிறார். இவரிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்கள் இன்று நாடெங்கும் பிரபலமான ஜோதிடர்களாக இருக்கிறார்கள்.
ஆயுர்வேத மருத்துவத்திலும் கரைகண்டவர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.
இப்படி பல்துறை விற்பன்னராகத் திகழும் பெரியவரிடம், வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் வாங்கி வெளியிட்டால் அது மிக்க பயனுள்ளதாக அமையுமே என்று தோன்றியதன் விளைவே, சக்தி விகடனில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருக்கும் கேள்வி&பதில் பகுதி.
வேதம், புராணம், தர்ம சாஸ்திரம், மன நலம், உடல் நலம், அன்றாட நடைமுறை, வழிபாட்டு முறைகள், ஆகம விதிகள், ஐதீகம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், கலாசாரம் போன்ற பல துறைகளிலும் வாசகர்கள் எழுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு விளக்கமாகவும் ஆணித்தரமாகவும், முழுக்க சந்தேகம் அகலும்படியாகவும் இவர் கொடுத்து வரும் விளக்கங்கள் சிலிர்க்க வைப்பவை. மூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம் என்பது சாஸ்திரிகளின் ஒவ்வொரு விளக்கத்திலும் நமக்குப் புலனாகிறது.
'உயர்ந்த கருத்துகளை, வேதத்தின் உள்கிடக்கைகளை இவ்வளவு எளிய நடையில் விளக்க முடியுமா..!' என்கிற ஆச்சரியம் இவரது பதில்களைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்பது உறுதி.
வாசகர்கள் காட்டிய ஆர்வமே இவ்வளவு துரிதமாக இதை நூலாகக் கொண்டுவரத் தூண்டியது. இந்த நூலில் வெளிப்பட்டிருக்கும் வாசகர்களின் சந்தேகங்களில் பல உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். படித்தால் தெளிவு பெறுவீர்கள். நிச்சயமாக பலனும் அடைவீர்கள்.
-
This book Iyyam pokum aanmeegam(part 1) is written by seshadrinath shastrigal and published by Vikatan Prasuram.
இந்த நூல் ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyyam pokum aanmeegam(part 1), ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், seshadrinath shastrigal, Aanmeegam, ஆன்மீகம் , seshadrinath shastrigal Aanmeegam,சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy seshadrinath shastrigal books, buy Vikatan Prasuram books online, buy Iyyam pokum aanmeegam(part 1) tamil book.
|
‘அறம் செய விரும்பு’ என்று எளிமையாகச் சொல்லிவிட்டார் ஔவையார். ஆனால் எந்த அறச்செயலாக இருந்தாலும் செய்யும்போது பல சந்தேகங்கள் எழுகின்றன. கடவுள் வழிபாட்டிற்கு எந்தத் திசை நோக்கி அமரவேண்டும்? தீபத்தை எப்படி ஏற்றவேண்டும்? எந்த மலர் உகந்தது? விரத நாட்களில் செய்யத் தகுந்தவை/தகாதவை எவை? ஆலயங்களில் எப்படி வழிபடவேன்டும், முன்னோர்களுக்கு வழிபாடு எப்படிச் செய்யவேண்டும், என்பது போன்ற பல ஐயங்கள் எழுவது சகஜம்.
நம்மில் பலர் சாஸ்திரங்களைப் படித்த தில்லை; ஏதோ பராபரியாகச் சிலவற்றைக் கேட்டிருக்கிறோம். எதிலும் சில அம்சங்கள் வழக்கத்தில் வந்துவிட்டன; ‘சம்பிரதாய’மாகிவிட்டன. இவை சரியா தவறா எனத் தெரியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் சில நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்தால் நமக்கும் சந்தேகம் வருகிறது. தவிரவும் பத்திரிகைகள் மிகுந்துவிட்ட இக்காலத்தில் பலவித கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இந்த நிலையில், சக்திவிகனில் வாசகர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு ஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் அளித்த விடைகளைத் தொகுத்து ஐந்து பாகமாக விகடன் பிரசுரத்தினர் வெளியிட்டிருக்கிறர்கள்.
சாஸ்திர அறிவுடன் யதார்த்தையும் நன்குணர்ந்த ஸ்ரீ சாஸ்திரிகள் சாஸ்திரவிதி வழுவாமலும், நடைமுறைக்கொப்பவும் ஆணித்தரமாகவும், எளிய முறையிலும் விளக்கமளித்திருக்கிறார்கள். உரிய காரணத்தையும் பல இடங்களில் விளக்கியிருக்கிறார்கள். மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இவரது விளக்கங்கள் அனைவரையும் நற்செயல்களிலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடத் தூண்டும்.
புத்தகங்களும் மிக அழகாகவும் அனேக அரிய படங்களுடனும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் இப்புத்தகங்கள் வீட்டிலிருப்பது, யாரோ பெரியவரே நம்முடன் இருந்து வழி நடத்திச் செல்வது போன்றது.
அனைவரும் இவற்றைப் படித்துப் பயன் பெறலாம்.