-
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள் நேரில் பழகும்போது ரொம்பவே சீரியஸான மூடில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. மதன் அதற்கு முற்றிலும் விதிவிலக்கு. தான் இருக்கும் சூழலையே ஒட்டுமொத்தமாக நகைச்சுவை வெள்ளத்தில் தோய்த்தெடுக்கிற குணாதிசயம் இயற்கையிலேயே வாய்க்கப் பெற்றவர் மதன். ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணையாசிரியராக அவர் பொறுப்பு??வகித்தபோது,??அவரிடமிருந்து??வெளிப்பட்ட பன்முகத் திறமைகள் என்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வியப்புக்குள்ளாக்கும். அப்படித்தான் வந்தார்கள்... வென்றார்கள் மூலம் தேர்ந்த சரித்திர ஆசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தி என் வியப்பைக் கூட்டினார் மதன். ஜூ.வி|யில் எழுதிய அந்தத் தொடரின் மூலம், கடந்த காலத்தின் பரிமாணத்தை சுவைபட படம் பிடித்துக் காட்டும் தேர்ந்த எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அவர், மனிதனின் மூளைக்குள் மனவியல் ரீதியாக புகுந்து பார்த்து எழுதிய இன்னொரு தொடர்தான் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்! மிகநுட்பமாக திரட்டிய தகவல்களைத் தனக்கே உரிய சிலிர்ப்பூட்டும் எழுத்து நடையில் தொகுத்து, வாசகர்களின் ஆரவாரமான வரவேற்பை இந்தத் தொடரிலும் அள்ளிக்கொண்டார் மதன். இந்த விஞ்ஞான, வரலாற்று பெட்டகத்தை ஒரு புத்தகமாக \ புத்துணர்வு மிக்க வடிவமைப்பில் வாசகர்களின் கைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். புத்தகம் பற்றி சொல்ல தனியாக வார்த்தைகள் தேவையில்லை... படிக்கத் துவங்கினாலே உங்களுக்கு இதன் அருமை புரிந்துவிடும்.
-
This book manithanukkualae oru mirugam is written by Madhan and published by Vikatan Prasuram.
இந்த நூல் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம், மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, manithanukkualae oru mirugam, மனிதனுக்குள்ளே ஒரு மிருகம், மதன், Madhan, Katuraigal, கட்டுரைகள் , Madhan Katuraigal,மதன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy manithanukkualae oru mirugam tamil book.
|