book

காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்

Kalam Kalamaga Varum Karpanai Nagarkal Valluvar Padaikum Vaiyathu Suvargam

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் வா.செ. குழந்தைசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :218
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357301
Add to Cart

''காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள்; வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்'' என்ற தலைப்பில் அறிவியல் அறிஞர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதியுள்ள நூலினை முழுமையாகப் படித்தேன். திருக்குறள் பற்றி எண்ணற்ற நூல்கள் எழுதப் பெற்றிருப்பினும் இந்நூல் ஒரு புது முயற்சியாகத் திகழ்கின்றது. நடைமுறையில் காணப்படும் நாடு, நகர் சமுதாய அமைப்பு, வாழ்வியல், செயற்பாடுகள் முதலியவற்றில் காணப்படும் குறைபாடுகளைக் களைந்து, வளமும் நலமும் வாய்ந்த இலட்சிய நாட்டினை உருவாக்கும் முயற்சிகள் காலம் காலமாக நடந்து வந்துள்ளன. சிந்தனைத் திறனும் கற்பனை ஆற்றலும் படைத்த தத்துவ ஞானிகள் இத்தகைய முயற்சிகளுக்கு வித்திட்டவர்கள். குறைபாடில்லாத கற்பனை நாட்டினை '' இல்லது, இனியது, நல்லது '' என்ற சொற்களினால் இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் சுட்டும் நாடக வழக்கிற்குப் பழைய உரையாசிரியர்கள் வழங்கியுள்ள விளக்கம் இங்கு நம் நினைவுக்கு வருகிறது.