book

ஆளை அசத்தும் ஆளுமை !

Aalai Asathum Aalumai!

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.ஆர். பாட்டி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184762983
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, சிந்தனை
Out of Stock
Add to Alert List

வாழ்க்கையை எதிர்கொள்ளவும், மனித உறவுகளை மேன்மைப்படுத்திக்கொள்ளவும் ஆளுமை என்பது அனைவருக்கும் அவசியம்.  எதிலும் முன்னின்று செயல்பட துடிக்கும் அனைவரும் நல்ல பர்சனாலிடியை வளர்த்துக்கொள்ள ஆர்வம் கொள்கின்றனர்.

'மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியதாக இருக்க வேண்டும்' என்று சொல்வார்கள்.  தோற்றத்தால் மட்டுமே வெளிப்படுவதல்ல ஆளுமை.  ஒருவரின் நல்ல குணங்ள், அடுத்தவின் மனதில்முக்கிய இடம் பெற்று ஆளுமையை வெளிப்படுத்தும்.

ஆளுமை தோற்றத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள், நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளும் மனப்பான்மை, சாதகமான சூழ்நிலைகளை அறிந்துகொள்ளும் மதிநுட்பம், சாதகங்களைத் தெரிந்துகொள்வதோடு நிற்காமல் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வழிகள் ஆகியவற்றை விவரிக்கிறார் நூலாசிரியர் ஜே.ஆர்.பாட்டி.

இவ்வளவு உயர்ந்த ஆளுமையை அடைவதில் தடைகள் இல்லாமல் இருக்குமா?  எங்கெங்கு தடைகள் ஏற்படும், அவற்றை வெற்றிக்கொள்வது எப்படி போன்ற கருத்துக்களையும் நூலாசிரியர் விவரிக்கிறார்.

'The Dynamics of Personality Development and Projection' என்ற ஆங்கில நூலை, சரளமான தமிழ் நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் எஸ். சரவணன்.

கூட்டம், பொது நிகழ்ச்சி, நேர்காணல், தொலைக்காட்சியில் பங்குகொள்வது போன்ற தருணங்களில் எப்படி நடந்து கொண்டால் எல்லோரையும் கவரலாம்.. கவர்வதோடு மட்டுமல்லாமல், மானம்போகாமல் இருப்பதற்கான 'ஐடியா'க்களும் இந்த நூலில் பஞ்சமில்லை.

-ஆசிரியர்