-
இந்த நாள் இனிய நாள்!
வாழ்க்கையை இனிதே வாழ வேண்டும். ஒவ்வொரு நாளையும் கொண்டா வேண்டும்; வாழ்வில் வரும் சிக்கல்களை நீக்க வேண்டும்; சிறுமைகளைச் சீராக்கிட வேண்டும்.. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
இறையருள் பெற வேண்டும்.
எல்லோருக்கும் இறையருள் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். கடவுளின் அருள் என்பது தினமும் கடவுளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்வதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. சாதாரண ஏழை-பாழைகள், வறுமையால் வாடுபவர்கள் செல்வம் இல்லாதோர், பசிப் பிணியால் அவதிப்படுவோர் இவர்களின் குறைகளைத் தீர்ப்பதாலும், இவர்களின் வாழ்க்கையில் பசுமை தீபம் ஏற்றுவதாலும் கூட இறைவனின் அருளைப் பெற முடியும்.
'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற மொழிகூட உணர்ந்து சொல்லப்பட்டதுதான். அதனால், அந்த நல்மொழியின்படி இறைவனை நல்வழியால்தான் தரிசிக்க முடியும். சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள் வழிகாட்டுதல்கள் நம்மை நல்வழிப்படுத்தும். அப்படி இறையருள் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இனிய நாள் ஆக்கிக்கொள்ள, இந்த நூலில் வழிகாட்டுகிறார் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி.
சக்தி விகடன் இதழ்களில் 'தினம் தினம் திருநாளே!' என்ற தலைப்பில், ஸ்வாமிஜி தொடர்ந்து எழுதிய பொன் வாக்குகளின் இரண்டாம் பாகம்தான் இந்த நூல்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் கற்றுத்தரும் பாடங்கள், அவர் சொல்லும் இறை நெறிகள், வழித்தடங்கள்... நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நாளையும் திருநாளாக்கும்.
-ஆசிரியர்
-
This book Thinam Thinam Thirunale (part 2) is written by Veyeshwi and published by Vikatan Prasuram.
இந்த நூல் தினம் தினம் திருநாளே பாகம்-2, வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thinam Thinam Thirunale (part 2), தினம் தினம் திருநாளே பாகம்-2, வீயெஸ்வி, Veyeshwi, Aarasiyal, அரசியல் , Veyeshwi Aarasiyal,வீயெஸ்வி அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Veyeshwi books, buy Vikatan Prasuram books online, buy Thinam Thinam Thirunale (part 2) tamil book.
|