-
உலகில் எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத, மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்துள்ள ஒரு வரம் சிரிப்பு. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள், வாழ்வின் துயர சம்பவங்களிலிருந்து மீள்வது எளிது. அதனால்தானோ என்னவோ 'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.
பலர் நகைச்சுவையாகப் பேசியே தன்னைச் சுற்றியிருப்பவர்களைச் சிரிக்க வைத்து விடுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே தன் எழுத்தால் சிரிக்க வைக்கமுடியும்! இந்த நூலின் ஆசிரியர் பாக்கியம் ராமசாமி, தன் எழுத்தாற்றலால் அவரது வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை உணர்வு பொங்க கதைகளாக எழுதி நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்.
வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே இல்லாமல் சில கதைகளை விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் எழுதியுள்ளார். உதாரணமாக ஆப்பிளின் மேல் பூசப்பட்டிருக்கும் மெழுகு பற்றியும், அந்த மெழுகை நீக்கி உட்கொள்ள வேண்டியது பற்றியும் எழுதியுள்ளார். மேலும், ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதை 'பலன்கள் பலவிதம்' என்ற தலைப்பில், ஜாதகம் பார்ப்பதில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுவாரசியமாக எழுதியுள்ளது படிப்பவர்களை சிந்திக்கவும் வைக்கும்.
இவருடைய கட்டுரைகளின் சிறப்பே நகைச்சுவையான, எளிமையான, சிந்திக்க வைக்கும் எழுத்துநடைதான்.
மொத்தத்தில் இந்த நூல், படிப்பவர்களை அகம் மகிழ்ந்து முகம் மலர வைக்கும் அருமருந்து.
-ஆசிரியர்
-
This book Sila Nerangalil sila Anubavangal (part 3) is written by Bakkiyam Ramasamy and published by Vikatan Prasuram.
இந்த நூல் சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3), பாக்கியம் ராமசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sila Nerangalil sila Anubavangal (part 3), சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3), பாக்கியம் ராமசாமி, Bakkiyam Ramasamy, Pothu, பொது , Bakkiyam Ramasamy Pothu,பாக்கியம் ராமசாமி பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bakkiyam Ramasamy books, buy Vikatan Prasuram books online, buy Sila Nerangalil sila Anubavangal (part 3) tamil book.
|