book

ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர்

Yezhisai Mannar M.K.T.Bhagavadhar

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாலதி பாலன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :198
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788184763041
Out of Stock
Add to Alert List

தீபாவளித் திருநாளான 1944 அக்டோபர் 16_ம் தேதி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒளி வீசிய ஒரு மாபெரும் சாதனையின் தொடக்க நாள். ஆம்! அன்றுதான் ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வெளியானது. தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது, 80 வருடகால தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இதுதான்! மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன், அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர்தான் அந்தச் சாதனையின் கதாநாயகன். நாடகத் துறையின் மூலம் திரைத் துறையில் நுழைந்து, கந்தர்வ கானத்தால் மக்கள் மனதை வென்று ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டம் பெற்ற எம்.கே.டி.பாகவதரின் வாழ்க்கைக் கதையை, சுவையோடு பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் மாலதி பாலன். பாகவதருக்கு, நாடகங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டதையும், இவரை திரைப்படத் துறை தத்தெடுத்தக் காரணத்தையும், முதன்முதலில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்ததின் பின்னணியையும், லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் இவர் சிக்க நேர்ந்த விவரத்தையும், சிறைவாசத்துக்குப் பிறகு இவருடைய நிலையையும் இந்த நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார் மாலதி பாலன் அவர்கள்.