-
புகழின் கிளையில் பூப்பூத்த ஒவ்வொருவரும் போராட்டத்தில் வேர்பிடித்தவரே! தனிப்பட்ட குணநலன்களிலிருந்து, சுவாரஸ்யமான பழக்க வழக்கங்கள் வரை பிரபலங்களின் பாதையையும் பயணத்தையும் கூர்ந்து கவனித்தாலே அவர்களின் வெற்றி சூட்சுமம் புலப்படும். ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியான, 60 பிரபலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் குறிப்புகளின் மொத்த தொகுப்புதான் இந்த நூல்! பெரியார் முதல் சோனியா வரை... ரஜினி முதல் பிரபாகரன் வரை... பலரைப் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களின் களஞ்சியம் இது. படித்துவிட்டு அந்த வாரத்தோடு முடிந்து போவதாக இல்லாமல், மூளைக்குள் ‘முடிந்து’ வைத்துக் கொள்கிற மினி சரித்திரமாக இந்தப் பகுதி இருந்ததால், தனி நூலாக வெளியிடுகிறோம். நம் மனதுக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றி பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும், ‘அட’ என பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் இந்தத் தொகுப்பு ஒவ்வொருவரும் பத்திரப்படுத்த வேண்டிய அசத்தல் ஆவணம்! சச்சின் டெண்டுல்கருக்குப் பிடித்த உணவு முதல், கவுண்டமணிக்குப் பிடித்த கார் வரை விரியும் இந்தக் கலக்கல் கருவூலம், கையடக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான சரித்திரச் சுவடு! பிரபலங்களையும் சாதனையாளர்களையும் இன்னும் நெருக்கமாக அறியவும், தெரியவும், புரியவும் அனைவருக்கும் இந்த நூல் நிச்சயம் பயன்படும்.
-
This book Rajini Muthal Prabakaran is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
இந்த நூல் ரஜினி முதல் பிரபாகரன், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajini Muthal Prabakaran, ரஜினி முதல் பிரபாகரன், விகடன் பிரசுரம், vikatan prasuram, Pothu, பொது , vikatan prasuram Pothu,விகடன் பிரசுரம் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Rajini Muthal Prabakaran tamil book.
|