book

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி!

Salesman…Savale samali!

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சரவணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762402
குறிச்சொற்கள் :தொழில், வியாபாரம், நிறுவனம், முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

பையைத் தூக்கிக்கொண்டு அலைகிறவர் மட்டும்தான் சேல்ஸ்மேன்’ என்று யாராவது நினைத்துக்கொண்டிருந்தால், அந்தக் கருத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். ‘தொழில் ரீதியாக இயங்கும் அத்தனைபேரும் சேல்ஸ்மேன்களே’ என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த நூல். சேல்ஸ்மேனாக இருக்கும் பலரும் அந்தத் தொழிலை ஒரு தற்காலிகப் பணியாகவே கருதுகின்றனர். மாற்றுத் தொழிலுக்கோ, வேலைக்கோ போகும்வரை அதை ஒரு வடிகாலாகவே பார்க்கின்றனர். ஆனால், சேல்ஸ்மேன் தொழிலிலும் பல சாதனைகள் புரியமுடியும்; அதையும் நிரந்தர வருவாய் ஈட்டித்தரக்கூடிய தொழிலாக மாற்ற முடியும் என்பதை பலர் சிந்திப்பதில்லை. அந்தச் சிந்தனை ஒரு சேல்ஸ்மேனுக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போதே அவர் ஒரு வெற்றிகரமான விற்பனைப் பிரதிநிதிதான்! ‘சாதாரண சேல்ஸ்மேன் எப்படி வெற்றிகரமான சேல்ஸ்மேனாக வலம் வருவது?’ இந்தக் கேள்வியை அடிநாதமாகக் கொண்டு பதிலளிக்கிறது _ ‘சேல்ஸ்மேன்... சவாலே சமாளி!’ எளிய உதாரணங்களுடனும், விளக்கங் களுடனும் பிரபல எழுத்தாளர் வால்டேர் வியெரா எழுதி, ‘சேஜ் பப்ளிகேஷன்ஸ்’ ஆங்கிலத்தில் வெளியிட்ட ‘THE NEW PROFESSIONAL SALESMAN’ புத்தகத்தின் தமிழ் வடிவம்தான் இந்த நூல். சேல்ஸ்மேன் என்பவர் யார்? வாடிக்கையாளரிடம் அவருடைய அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்? அவரிடமிருந்து ஆர்டர் பெறுவது எப்படி? _ இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு இந்த நூல் அழகாக விடை தருகிறது.