book

எம்ப்ராய்டரி

Embroidery

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மிருதுளா நாகராஜன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :192
பதிப்பு :6
Published on :2009
ISBN :9788189780159
குறிச்சொற்கள் :தொழில், வியாபாரம், க‌ற்ப‌னை, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

உலகம் முழுக்கப் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தில் அபாரமான ஒற்றுமை உண்டு.
'நான் அணிந்திருக்கும் உடை, உலகில் வேறு யாரிடமும் இல்லாத அளவுக்குத் தனித்தன்மை வாய்ந்ததாக, மிகச் சிறப்பானதாக, எல்லோருடைய கவனத்தையும் கவர்வதாக, அசத்தலாக இருக்க வேண்டும்' என்று மனதார விரும்பாத பெண்களைப் பார்க்கவே முடியாது!

அந்த எண்ணம் அடிமனதில் இருப்பதால்தான், எம்ப்ராய்டரி மூலம் டிசைன் டிசைனாக கைவேலைப்பாடு செய்த உடைகளைப் பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். மிக அழகாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஓர் உடையைப் பார்க்கும்போது, 'அடேங்கப்பா!' என்று மனதில் பிரமிப்பு ஏற்படுகிறது. அதே சமயம், 'நம்மால் இதையெல்லாம் செய்ய முடியுமா?' என்ற ஏக்கமும் பல பெண்களுக்கு ஏற்படுவது உண்மை.

நிச்ச‌ய‌ம் முடியும்! நிறைய‌ப் பேர் நினைப்ப‌து போல‌, எம்ப்ராய்ட‌ரி அப்ப‌டியொன்றும் க‌ற்றுக்கொள்ள‌ முடியாத‌ க‌ஷ்ட‌மான‌ விஷ‌ய‌ம் அல்ல‌. நிறைய‌ ஆர்வ‌ம், ந‌ல்ல‌ ர‌ச‌னை, கொஞ்ச‌ம் உழைப்பு... இந்த‌ மூன்றும் இருந்தால் போதும் _ எந்த‌ப் பெண்ணுமே எம்ப்ராய்ட‌ரி என்கிற‌ சித்திர‌ப் பின்ன‌லில் வித்த‌கி ஆக‌லாம்! க‌ற்ப‌னையில் தோன்றும் வ‌ண்ண‌ங்க‌ளுக்கும் வ‌டிவ‌ங்க‌ளுக்கும் ஊசி_நூலால் உயிர் கொடுத்து, ப‌டைப்பாற்ற‌லின் மூல‌ம் ம‌ட்டுமே கிட்டுகிற‌ திருப்தியை அனுப‌விக்க‌லாம்!

'க‌ற்ற‌தை வெளிப்ப‌டுத்திக் கைத்த‌ட்ட‌ல் பெறுவ‌த‌ற்கு ம‌ட்டும‌ல்ல‌ இந்த‌க் க‌லை... க‌லையைத் தொழிலாக்கி, வித்தையைக் காசாக்கி, வாழ்க்கையில் மேம்பாடு காண‌வும் வாய்ப்ப‌ளிக்கிற‌து இது' என்கிறார், 'அவ‌ள் விக‌ட‌ன்' இத‌ழில் இர‌ண்டாண்டுக‌ளாக‌ எம்ப்ராய்ட‌ரி தொட‌ர் எழுதிவ‌ந்த‌ மிருதுளா நாக‌ராஜ‌ன்.

'முப்ப‌து ஆண்டுக‌ளாக‌ இந்த‌க் க‌லையைப் ப‌ல‌ ஆயிர‌ம் பேருக்குப் ப‌யிற்றுவித்து வ‌ருப‌வ‌ர், ம‌துரா கோட்ஸ் நிறுவ‌ன‌த்தின் ஆலோச‌க‌ர், பார‌திய‌ வித்யா ப‌வ‌னில் எம்ப்ராய்ட‌ரி லெக்ச‌ர‌ர், தேசிய‌ வ‌டிவ‌மைப்புத் தொழில்நுட்ப‌க் க‌ழ‌க‌த்தின் தைய‌ல் ம‌ற்றும் எம்ப்ராய்ட‌ரி துறை கெள‌ர‌வ‌ப் பேராசிரியர்' என‌ப் ப‌ல‌ பெருமைக‌ளைப் பெற்றுள்ள‌ மிருதுளா நாக‌ராஜ‌ன் கூறுவ‌தை எவ‌ரால் ம‌றுக்க‌ முடியும்?!

தொட‌ராக‌ வ‌ரும்போதே, 'இதை எப்போது புத்த‌க‌மாக‌ப் போடுவீர்க‌ள்?' என்று கேட்டு வ‌ந்த‌ க‌டித‌ங்க‌ள் ஏராள‌ம். 'ப‌த்திரிகையின் ஒரு ப‌குதியாக‌ வெளியாகும்போது ஏற்ப‌டுகின்ற‌ இட‌நெருக்க‌டி, புத்த‌க‌மாக‌ வெளியிடும்போது பிர‌திப‌லிக்க‌க்கூடாது' என்றும் ப‌ல‌ர் கேட்டிருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் விரும்பிய‌த‌ற்கு மேலாக‌வே, இந்த‌ப் புத்த‌க‌த்தில் புகைப்ப‌ட‌ங்க‌ள் பெரிய‌ அள‌வில், அதிக‌ எண்ணிக்கையில் சேர்க்க‌ப்ப‌ட்டு _ ப‌யிற்சிக் குறிப்புக‌ளும் விரிவாக்கித் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

த‌மிழில் புதிய‌ முய‌ற்சியாக‌, விரிவான‌தொரு எம்ப்ராய்ட‌ரி நூலை விக‌ட‌ன் பிர‌சுர‌மாக‌ வெளியிட்டு, உங்க‌ள் க‌ர‌ங்க‌ளில் த‌வ‌ழ‌விடுவ‌தில் பெருமித‌ம் அடைகிறேன்.