book

இது பெரியவங்க உலகம்

Ithu Periyavanga Ulagam

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அனில் பாக்கி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :271
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762143
குறிச்சொற்கள் :வாழ்க்கை முறை, சரித்தரம், ஜப்பான், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

மக்கள்தொகையில் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து வரும் நாடு ஜப்பான்!  'எதிர்காலத்தில் ஜப்பான் என்ற ஒரு நாடு இருக்காது;  ஆனால் ஜப்பானியர்கள் மட்டும் இருப்பார்களோ!' என்று நினைக்கத் தோன்றுகிறது.  இதே நிலைதான் பெரும்பாலான வளர்ந்த நாடுகளிலும் காணப்படும்.  இதில் அமெரிக்கா மட்டும் விதிவிலக்காக இருக்கும்.

வளரும் நாடுகளை ஓர் அச்சம் பிடித்துள்ளது.  வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்படலாம்.  ராணுவ வீரர்கள்  இல்லாத நிலை ஏற்படலாம்.  உலக அரங்கில் தங்கள் நாடுகளின் பங்கு அருகிப்போகும் என்ற அச்ச உணர்வு, வளரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் தற்போது நம்பிக்கை இழந்துள்ளனர்.

மக்களுக்கு தற்போது உள்ள மிகப் பெரிய, இதுவரை தீர்வு கிடைக்காத கவலை என்பது, இந்த முதியவர்கள் தங்கள் வயோதிக காலத்தை எப்படி கடக்கப் போகிறார்கள் என்பதுதான்.  ஏனெனில், முன்னெப்போதும் இல்லாத வகையில்,முதியோர் ஆயுட்காலம் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது.  முதியோர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிக அளவிலான பென்ஷன் இளைய தலைமுறையினரின் முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது.

இந்தப் புத்தகத்தின் பக்கங்களை வாசிக்கும் வாசகர்களுக்கு, உலகின் மக்கள் தொகை மூப்படைந்து வருகிறதுத என்பதை வரலாறு மூலமாக தெரிவித்து, அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விளக்கியுள்ளேன்.  உலக மக்கள்தொகையில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதற்கு வளங்கள் சரியாக பகிர்ந்தளிக்கபடவில்லை என்பதும், வாழ்க்கை முறை வேறுபாடும்தான் காரணம் என்பதையும் தெரிவித்துள்ளேன்.  எனினும், அதற்கான தீர்வு காணும் முயற்சியை வாசிப்பவர்களிடமே விட்டு விடுகிறேன்.

-ஆசிரியர்