book

பேய்

Paei: Anubavangal, Amaanushyangal, Ariviyal

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சஞ்சீவ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935509
குறிச்சொற்கள் :கற்ப்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

உண்டா, இல்லையா? கடவுளுக்கு அடுத்த அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் பேய்தான்.  ஆதிகாலம் தொட்டு அறிவியல் ஆட்சி செய்யும் இந்தக் காலம் வரை அமானுஷ்யங்கள் மீதான அச்சமும் நம்பிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றன.

ஆவி, பேய், பூதம், மோகினி, கொள்ளிவாய் பிசாசு, காட்டேரி, காத்து, கருப்பு என்று பல வடிவங்களில் மனிதனின் மனத்தை ஆக்கிரமத்திருக்கும் பேய், நிஜமா, கற்பனையா?  ஆவிகள் பலி வாங்குமா?  இறந்து போனவர்களோடு மீடியம் வழியாக பேசலாமா?  பில்லி, சூன்யம், ஏவல் போன்ற மாந்திரீக விஈயங்களில் எவ்வளவ உண்மை உள்ளது? 

மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்னும் கேள்வியில் இருந்துதான் அத்தனை சந்தேகங்களும்,  அத்தனை பயங்களும், அத்தனை நம்பிக்கைகளும் உருக்கொள்கின்றன.  உள்ளூரில் மட்டுமல்ல, முன்னேறிய நவீன நாடுகளிலும் பேய்கள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன.  

அறிவியலுக்கு பொருந்தாது என்று சொல்லி பேயை நிராகரிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பேயின் இருப்பை மறுதலிக்க முடிந்தது போல், பேய் பயத்தை ஒழிக்க அறிவியலாலும் முடியவில்லை என்பது தான் நிஜம்.

இருண்ட உலகில் ஒளி பாய்ச்சும் இந்தப் புத்தகம், அனுபவம், அறிவியல், அமானுஷ்யம்,  மூன்றின் கலவை.

நூலாசிரியர் சஞ்சீவி, ஓவிய ஆசரியராகப் பணியாற்றியவர். 'பாக்யா' வார இதழின் நிர்வாக ஆசிரியராக பதினான்கு ஆண்டுகள் இருந்தவர்.  கண்ணன் சர்வதேச அறிவியல் ஆய்வு மையத்தின் நிறுவனர். அமானுஷ்ய விஷயங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக தொடர்ந்து எழுதி வருகிறார்.