-
கடைகளில் விதவிதமான பதார்த்தங்களைப் பார்த்தவுடன்,நாக்கில் எச்சில் ஊறுவது இயல்பு. கூடவே வயிறு பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயமும் ஏற்படும்! ஆனால், வயிற்றுக்கு இதமாக வீட்டிலேயே இவ்வகை விதவிதமான பதார்த்தங்களைச் செய்து சாப்பிட்டால்...? பசிக்காக உண்பவர்களைவிட ருசிக்காக உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும், நம்மைச் சுற்றி இருப்போரை ரசித்து ருசித்து சாப்பிட வைக்கும் சமையல் கலை, இன்றைக்கு எத்தனை பேருக்கு வசப்பட்டிருக்கிறது? சமையலறைக்குப் புதிது என்றாலும் பரவாயில்லை, கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்துவிட்டால் போதும்... இந்தப் புத்தகத்தில் உள்ள உணவு வகைகளை மிகவும் சுவையாகச் செய்துகொடுத்து, வீட்டில் உள்ளவர்களை குஷிப்படுத்தி விடலாம். சூப்பர் டிபன் வகைகள்; பண்டிகைகளைக் கோலாகலமாகக் கொண்டாட வைக்கும் விதவிதமான பலகாரங்கள்; சட்டென தயாரிக்க இயலும் சப்பாதி வகைகள்; வெரைட்டி ரைஸ் வகைகள்; குழந்தைகளை குதூகலப்படுத்தும் ஸ்கூல் லஞ்ச் வகைகள்; விசேஷ தினங்களில் செய்யக்கூடிய இனிப்பு வகைகள்; சிறார்களை திக்குமுக்காடச் செய்யும் சுவையான ஐஸ்கிரீம் வகைகள்... _ இல்லத்தை இனிமையாக வைக்க வசந்தா விஜயராகவனின் இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்குக் கை கொடுக்கும். ‘அவள் விகடன்’ இதழுடன் வெளியான இணைப்புகளின் சுவையான தொகுப்பு இது. சமைத்துப் பார்த்து, சுவைத்து மகிழுங்கள்!
-
This book Ovvaru Naalum Ovvaru Suvai is written by Vasantha Vijayaragavan and published by Vikatan Prasuram.
இந்த நூல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை, வசந்தா விஜயராகவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ovvaru Naalum Ovvaru Suvai, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை, வசந்தா விஜயராகவன், Vasantha Vijayaragavan, Samayal, சமையல் , Vasantha Vijayaragavan Samayal,வசந்தா விஜயராகவன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vasantha Vijayaragavan books, buy Vikatan Prasuram books online, buy Ovvaru Naalum Ovvaru Suvai tamil book.
|