book

ரகசியமாய் ரகசியமாய்

Ragasiyamaay Ragasiyamaay

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மது ஹனி
பதிப்பகம் :அறிவாலயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

ஆனாலும் எதை வெற்றி கொண்டான். பூகம்பத்தை தடுத்து நிறுத்தி விட்டானா? சுனாமி வெள்ளத்திற்கு அணை போட்டு விட்டானா? மரணத்தை தான் வென்று விட்டானா? அவ்வளவு ஏன்? இந்த மழை பொழிகிறதே. அதனை அவன் நோக்கத்திற்குப் பொழிய செய்து விட முடியுமா? இல்லை பொழிவதை தடுத்து நிறுத்த முடியுமா? கையில் வைத்திருந்த காபி கப் காலியாகிவிட்டதைக் கூட உணராமல் மழையின் அழகை ரசித்துக் கொண்டே இருந்தாள் அவள். செல்லமாய் அதனோடு உரையாடிக் கொண்டிருந்தாள் மனதிற்குள். அதே நேரம் அந்த தளத்தின் மறுபக்கத்தில் அவனும் கையில் காபி கோப்பையுடன் மழையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.