book

பாரதியின் பன்முகப் பார்வை

Bharathiyin Panmuga Parvai

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். விசாலாட்சி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2010
ISBN :9798177358734
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, பாரதியின் பன்முகப் பார்வை, தலைவர்கள்
Add to Cart

பாரதி, காலத்தை வென்ற கவிக்குயில், மங்கிக் கிடந்த தமிழிற்கு மறுமலர்ச்சி தந்து உலகமெல்லாம் தமிழ் முழக்கம் செய்யத் தமிழரை ஊக்கியவர். விடுதலை முரசு கொட்டி வெற்றிக் கொடி ஏற்றியவர். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்' எனச் சிறுமை பல கண்டு பொங்கியெழுந்தவர். நாட்டு விடுதலையே தமது உயிர் மூச்சு என வாழ்ந்த மாமனிதர். வாழ்வியல் சிந்தனையாளர், சீரிய கவிஞர், இதழாளர், சிறந்த கட்டுரையாளர் எனும் பன்மூகம் கொண்ட மகாகவி பாரதியின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்திருந்தாலும், எண்ணற்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் பன்முகப் பார்வை குறித்துத் தேசியக் கருத்தரங்கு நிகழ்த்தி அதில் இடம்பெற்ற கட்டுரைகளை நூலாகவெளியிட. எமது கல்லூரியின் தமிழ்த்துறை எடுத்திருக்கும் இந்த நல்ல முயற்சி, பாரதியின் பன்முகச் சிறப்பினை, மாணவச் செல்வங்களுக்கும். ஆசிரியப் பெருமக்களுக்கும், பிறருக்கும் நிறைவாகத் தரும் என்பது உறுதி. - சகோ. பாத்திமா முதல்வர். பாத்திமா கல்லூரி, மதுரை.