book

சத்ரபதியின் மைந்தன்

Sathrapathiyin Mynthan

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. நக்கீரன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184761658
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
Add to Cart

‘இந்தியாவை இந்து நாடாக மாற்றவேண்டும்’ என்று கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி. ஒரு சிப்பாயின் மகனான இவர், தனது சர்வ வல்லமையால் மகாராஷ்டிரத்தின் மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு மகாராஷ்டிரத்தையே ஓர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவரையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைவிட படையிலும் வீரத்திலும் பலம் குறையாத ஒளரங்கசீப்பை எதிர்த்த துணிச்சல்காரர் மாமன்னர் சத்ரபதி சிவாஜி. சத்ரபதி சிவாஜியின் மைந்தன் சாம்பாஜி. பிறப்பால் வீரனின் மகனாகப் பிறந்து, ஓர் ஒப்பற்ற வீரனாகவே வளர்ந்தார் சாம்பாஜி. ஆனால், வாலிபத்தில் தந்தையை எதிர்த்துக்கொண்டு மொகலாயருடன் சேர்ந்து, தந்தையின் மரணத்தறுவாயில்கூட உடன் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட மகனாகிப் போனார். தந்தைக்குப் பிறகு நாடாளவேண்டிய சாம்பாஜி மது, மாது என்று சுற்றித்திரிந்து கூடா நட்போடு சல்லாப வாழ்க்கையில் மூழ்கினார். அதேநேரத்தில், சாம்பாஜியின் சிற்றன்னையும் அவரது சகோதரரும் இணைந்து செய்த சூழ்ச்சியாலும் சாம்பாஜி பல இன்னல்களைச் சந்தித்தார். வீரனாக இருந்தாலும் கேளிக்கையில் மட்டுமே அதிக நேரத்தைச் செலவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதை மறந்துபோனதால், இவரது ஆட்சி அதிகாரம் அந்தரத்தில் ஆடியது; மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்க நேரிட்டது. இந்த பலவீனம் எதிரிகளுக்குச் சாதகமாகிப்போனது. மொகலாய மன்னர் ஒளரங்கசீப் தூண்டில் போட, வலையில் மீன் சிக்கியது. சாம்பாஜி நிர்வாணமாக்கப்பட்டு 1689_ல் படுகொலை செய்யப்பட்டார்! சத்ரபதி சிவாஜியின் மைந்தன் சாம்பாஜி, நாடு இழந்தக் கதையை நாடகப் பாணியில் எழுதியிருக்கும் நூலாசிரியர் இரா.நக்கீரன், இந்த நாடகத்தில் நகைச்சுவை நடையை கையாண்டிருப்பதும், சில கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்திருப்பதும் நாடகத்தன்மைக்கு வலு சேர்த்திருக்கிறது. நாட்டை ஆளவேண்டியவன் எப்படி இருக்க வேண்டும் _ எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ‘சத்திரபதியின் மைந்தன்’ சாம்பாஜியின் வாழ்க்கையே ஒரு சாட்சி!