-
கந்தனுக்கு அண்ணன் கணபதியைப் போற்றினால் உந்தனுக்கு உண்டே உயர்வு. திக்கெட்டும் பரவியுள்ள இந்திய வழிபாட்டு முறையில், முக்கிய வழிபாடாகத் திகழ்வது காணாபத்யம் என்ற கணபதி வழிபாடு. இந்து மதத்தினர் எங்கெல்லாம் பரவியுள்ளார்களோ அங்கெல்லாம் கணபதி வழிபாடும் சிறப்புற இருக்கிறது. அவர்களைப் பார்த்து, வெளிநாட்டவர் பலரும் கணபதியைக் கைதொழுகின்றனர். செந்தாமரைப் பூவில் வீற்றிருப்பவர்; அம்பு, அங்குசம், பாசம், வில் இவற்றைத் தாங்கிய நான்கு கரங்களைக் கொண்டவர்; சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்படுபவர்; ஓம்கார வடிவானவர்; முழுமுதற் கடவுள்; முன்வினை அழிப்பவர்... இப்படிப்பட்ட விநாயகப் பெருமானைப் பணிந்து வணங்கும் பக்தர்களுக்கு இந்நூல் ஒரு வரப் பிரசாதம். விநாயகரின் அவதாரக் கதை முதல், அவரின் திருவிளையாடல் கதைகள் வரை பலவற்றையும் முழுதாக அறிந்துகொள்ள இந்நூல் துணைபுரியும். கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் விநாயகரை ஏன் முதலில் வணங்குகிறார்கள்; விநாயகரின் வலது தந்தம் உடைந்து காணப்படுவதன் காரணம் என்ன; நாம் முழுமுதற் கடவுள் என்று விநாயகரை அழைப்பது ஏன்; அவருடைய வாகனமாக எலி எப்படி அமைந்தது; அண்ட சராசரங்களும் விநாயகரின் வயிற்றுக்குள் அடக்கம் என்பது எப்படி; விநாயகர் பிரம்மசாரி என்றால் சித்தி&புத்தி சமேத விநாயகர் என்கிறார்களே எப்படி? _ இவை போன்ற ருசிகரத் தகவல்களை, அனைவரும் ரசித்துப் படிக்கும் வண்ணம் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மு.கோபி சரபோஜி. விநாயகர் என்றாலே இன்று பரவலாகப் பரவியுள்ள சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி விழாக்கள்தான் நம் நினைவுக்கு வரும். இந்த விழாக்கள் எப்படி வந்தன; சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி என்பது எப்படி அமைந்தது போன்ற தகவல்கள் மற்றும் சதுர்த்தி விரதக் கதைகள் ஆகியவை, படிப்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும். அயல்நாடுகளில் பரவியுள்ள விநாயகர் வழிபாடு குறித்த தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விநாயகர் வழிபாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புவோருக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் இந்தத் தொகுப்பு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
-
This book Vinai Theerkkum Vinayagar is written by M.Gobi Saroboji and published by Vikatan Prasuram.
இந்த நூல் வினை தீர்க்கும் விநாயகர், மு. கோபி சரபோஜி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vinai Theerkkum Vinayagar, வினை தீர்க்கும் விநாயகர், மு. கோபி சரபோஜி, M.Gobi Saroboji, Aanmeegam, ஆன்மீகம் , M.Gobi Saroboji Aanmeegam,மு. கோபி சரபோஜி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M.Gobi Saroboji books, buy Vikatan Prasuram books online, buy Vinai Theerkkum Vinayagar tamil book.
|
அன்பை அருளும் ஆனைமுகத்தோன்
விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் ஒன்பது நாளும் விநாயகர் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சதுர்த்தி தொடங்கி 11 நாட்கள் ஆனந்த சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றனர்.
எளிமையின் நாயகன்
விநாயகர் குழந்தைகளின் கடவுள் அதனால்தான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சி தருகிறார். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். இவரை எளிமையாக வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வணங்குவார். அதனால்தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும் தனக்கு பிடித்தமானவையாக வைத்திருக்கிறார்.
முழுமுதற் கடவுள்
ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப்பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் – O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடித்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.
விநாயகரின் தோற்றம்
சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்றிருந்த போது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது. அவ்வுருவத்தை பிள்ளையென பாவித்த பார்வதி தேவி, எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு நீராடச் சென்றுவிட்டார். அப்போது அங்கு வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவன் பிள்ளையாரின் சிரத்தை கொய்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் வெளியே வந்த பார்வதி தேவி சிரச்சேதமுற்றுக் கிடந்த பிள்ளையார் கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட அனைத்தையும் அழிக்கத் தொடங்கினார்.
வடதிசையில் இருந்த இறைவன்
காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து ‘வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு கட்டளையிட்டார். அதன்படி வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு “கணேசன்” என பெயரிட்டு தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென ‘நாரத புராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது ஒரு ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி திதியாகும். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் களி மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபடுவது சிறப்பு.
இருபத்தியோருபேறுகள்
விநாயகர் சதுர்த்தி விரதம் கடைபிடிப்பதால் 21 பேறுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், முக லக்ஷணம், வீரம், வெற்றி,.எல்லோரிடமும் அன்பு பெறுதல், நல்லசந்ததி, நல்ல குடும்பம், நுண்ணறிவு, நற்புகழ், சோகம்இல்லாமை, அசுபங்கள் அகலும், வாக்குசித்தி, சாந்தம், பில்லிசூனியம் நீக்குதல், அடக்கம் ஆகியவை கிடைக்கும் என்கின்றன புராணங்கள். எனவே நன்மைகள் அனைத்தும் கிடைக்க விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோம்.
தும்பிக்கை நாயகனின் அருளால் மகிழ்ச்சி, நிம்மதி தவழட்டும்- ஜெ. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
சென்னை: நம்பிக்கை சின்னமாம் தும்பிக்கை நாயகனின் அருளால் வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறையட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை தமிழகமெங்கும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
ஞான முதல்வனாம் விநாயகர் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் உளம் கனித்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வரர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாக துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றியே அன்றி தோல்வி காணாது என்பது நம் நாட்டு மக்களின் தொன்று தொட்ட நம்பிக்கை ஆகும்.
நம்பிக்கை சின்னமாம் தும்பிக்கை நாயகனின் அருளால் வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறையட்டும் என்று வாழ்த்தி, விநாயகர் சதுர்த்தி திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.