book

சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும்

Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cart

சார்ஸ்' என்ற இந்த புதிய நோய்  உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கியதாக கருதப்படும் இந்த நோய், ஹாங்காய், மலேசியா, சிங்கப்பூர், தைவான், கனடா , அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள்  பெருமளவு  பாதிக்கப்பட்ட இந்த நிலையில், அங்கியிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் அதிகமென்பதால், அந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இந்த நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.  எனவே, அதற்குரிய முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை நமது நாடு எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் நமது நாட்டில்  கூட பலருக்கு சார்ஸ் நோய் ஏற்ப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. அதில் சிலருக்கு இந்த நோய் இருப்பது உறுதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, யாருக்கு தும்மல், காய்ச்சல், இருமல் என்றாலும் அதை சார்ஸ்'நோய் என்ற மக்கள் பயந்து கொண்டிருக்கும் வேளையில் , இந்த நோய் குறித்து மக்களுக்கு பயன்படும் ஒரு கட்டுரை எழுதலாமென்று தான் முதலில் நினைத்தேன். ஆனால், நமது நாட்டில் எய்ட்ஸ்' சார்ஸ்,போன்ற கொடிய வைரஸ் நோய்களைவிட வேகமாக பலவும் மற்றொரு நோய் இருக்கிறது.  இந்த வதந்தி பரவினால் அது மேற்கூறிய நோய்களைவிட மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். நமது நாட்டில் எப்போதுமே இப்படித்தான்.  நல்ல விஷயங்கள் பலவும் நோஞ்சான் குழந்தைகளாக, செயலற்று இருக்க, தேவையற்ற விஷயங்கள் தான் வீரியத்துடன் பரவி, விஷ வித்துக்களாக மாறிவிடுகின்றன. சில போலி வைத்தியர்கள் இருக்கிறார்கள். இதில் சிலர், தாங்கள் தான் சார்ஸ் ஸ்பெஷலிஸ்டுகள் என்றும் கூட தங்களை விளம்பரபடுத்திக் கொள்வார்கள். அதில் எந்த வெட்கமும் படமாட்டார்கள். இப்படி இந்த நோய் குறித்து  அறிந்துகொள்ள செய்திகள் அனைத்தையுமே திரட்டி மக்களுக்கு  பயன்தரும்  வகையில் எழுதியுள்ளேன்.

                                                                                              
                                                                                                                                         -  முத்துச் செல்லக்குமார்.