book

நலவாழ்வு நம் கையில்

Nalavaazhvu Namkaiyil

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.சு. நரேந்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :1999
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், கண்டுபிடிப்புகள்
Add to Cart

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நலவாழ்விற்கான அணுகுமுறை  நாளுக்கு நாள்  மாறிவருவது கண் கூடு. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நோய்க்கான காரணம் என்னவென்று அறியாத நிலையில் அறிகுறிகளுக்கே மருத்துவம் அளிக்கப்ட்டது. அதன் பின்னர் டாக்டர் ராபர்ட்காக் போன்ற விஞ்ஞானிகள் பாக்டீரியாதான் குறிப்பிட்ட நோய்க்கான காரணம் எனக்கண்டுபிடித்த  பிறகு  அதற்கான மருத்துவம், அளிக்கப்ட்டு வாழும் ஆண்டுகள் கூடின. இந்நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளான  அக நோக்கிகள், லேசர்  மருத்துவம், ஆரம்ப நிலை நோயை அறிந்து முழுக்குணம் அளிக்க உதவுகின்றன.  இது தவிர. தனி மனித நலவாழ்வுக்குச் சில உடற்பயிர்சியும் மனப்பயிற்சியும் அவசியம். மேலும் பொதுவான சுற்றுப்புறச் சூழ்நிலைப்பாதுகாப்பும் தேவை. இதனை மனத்தில் கொண்டே என் அனுபவத்தில் கண்ட உண்மைகள், உலகில் சோதனைகள் மூலம் அறிந்து வெற்றி நடை போடும் நல வாழ்விற்கான நோய்தடுப்புமுறைகளுடன் சில அத்தியாயங்களில் நோய் வந்த பின்னரும் உடல் பாதுகாப்புக்கான முறைகளும் இப்புத்தகத்தில்  கூறப்பட்டுள்ளன. சில கருத்துகள் சில இடங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பெறுகின்றன. இது அக்கருத்தை மனத்தில் பதிய வைப்பதற்காகவே.

                                                                                                                                                         - சு. நரேந்திரன்.