book

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளமுனைவர் தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், பழந்தமிழ்பாடல்கள்
Out of Stock
Add to Alert List

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் கூறுகிறது. புறத் தூய்மையாகிய விடியற்காலையிலேயே எழுதல், நன்னீராடல், உடை உடுத்தல், உணவு உண்ணல் உறங்கும் முறை - போன்றவற்றையும் முறையாக கூறுகிறது. இந்நூலுக்கு மூலநூல் 'ஆரிடம்ய என்னும் வடமொழி நூலாகும். இந்நூலூல்  குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா,   பஃறொடை வெண்பா   என வெண்பாவின் பலவகைகள் பயின்று வருகின்றன. இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது. கற்பவர் தம் வாழ்வை வளமாக்குவது.  நான்கு இரத்தினங்கள் பதித்த ஆபரணம் போல இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு பொருள்கள் அடங்கியிருப்பதால் இந்நூல் ;நான்மணிக்கடிகை ' என்னும் பெயர் பெற்றது. இந்நூல் 106 வெண்பாக்களை கொண்டதாகும்.நான்மணிக்கடிகை என்னும் இந்நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார் ஆவார். இவருடைய இயற்பெயர் யாகனார் என்பதாகும். இவருடைய ஊர் விளம்பி என்பதாகும். இவரைப்பற்றி வேறு  தகவல்கள் அறிவதற்கில்லை.இவ்வினிய நூலைக் கற்று வாழ்வில் பெரும் பயன் எய்த விரும்புகிறோம்.

                                                                                                                                           -பதிப்பகத்தார்.