book

உதிரிப் பூக்கள்

Uthiri Pookal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகேந்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

படிக்கிற காலத்திலும்,சரி சென்னை வந்தபிறகும் சரி, எந்த வித சினிமாக் கனவும் எனக்குக் கிடையாது. ஆனால், நல்ல சினிமா பற்றிய தர்க்கம் மட்டுமே படிக்கிற காலத்தில் எனது நண்பர்களுடன் வைத்திருந்தேன். அதுவும் பொழுது போக்கிற்காக  இந்த மாணவக் காலத்து தர்க்கங்கள்தான் பின்னாலில் திரைப்பட இயக்குயராக நான் மாறியபோது என் முதல் படமாக 'முள்ளும் மலரும் ' என்ற  படத்தை உருவாகக்  காராணமாயின. ஒரு திரைப்படத்திற்கான திரைக்கதை என்பது அவர் அவர்களின் தனிப்பட்ட ரசனை. அது அவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் விருப்பு, வெறுப்புகளையும், அழகுணர்ச்சியையும் , தனித்தன்மையையும் பொறுத்தது.  யதார்த்தமான கதைப் போக்கில், நம்மையே நாம் அடையாளம் கண்டு கொண்டு நாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வகையில்,  உணர்வுகளும் கதா பாத்திரங்களும் , நிகழ்வுகளும் திரைக்கதையில்  வரவேண்டும்  என்பதே எனது தீர்மானம். ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை இப்படிச் சொல்வதுண்டு ஒரு படத்தைப் பார்த்து முடிக்கும் வரை, இயக்குனர் , ஒளிப்பதிவாளர் , நடிகர்கள், எவருமே படம் பார்க்கிறவர்களின் கண்களை  உறுத்தவோ, கதையின் போக்கிலிருந்து அவர்களின் கவனத்தைத் திருப்பவோ கூடாது. படம் பார்த்து விட்டு வீடு திரும்பி, ஓய்வுவெடுக்கும் போதுதான் பார்வையாளர் நினைவுக்கு அவர்கள் வரவேண்டும் உதரிப்பூக்கள் பனம் மேற்கண்டபடியே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை படம் வெளியான பிறகே தானும் தெரிந்து கொண்டேன்.

                                                                                                                                                    - மகேந்திரன்.