-
தாத்தாத்ரேயருக்கு 96 குருமார்களாம் எனக்கு அதை விட அதிகம். மிக அதிகம் எனது பட்டியலின் உச்சியில் இருப்பவர்கள் இரண்டு பேர் . மகா கவி பாரதியும், மகாஞானி ஓஷோவும். இந்த இரண்டு பேரும், எனக்கு இரண்டு இரயில் பெட்டிகளில் கிடைத்தார்கள்.1951 ஆம் ஆண்டில், நான் கோவியிலிருந்து உடுமலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஒரு 'பகல் நேரப் பாஞ்சர்' இரயிலில், என் கையில் பாரதியின் பாஞ்சாலி சபதம்' மட்டும் உள்ள ஒரு சிறு புத்தகம் இருந்தது. இளங்காலைப் பொழுதின் இதமான வெயிலை ஏற்றபடி, சாளரத்தின் ஓரத்தில் அமர்ந்து அதற்குள் மூழ்கினேன். உடுமலை வந்தது. புத்தகம் முடிந்தது. உடனே ஒரு கவிதை பிறந்தது. அது என் முதல் கவிதை. பாரதி எனக்குள் கவிச்சுடர் ஏற்றி வைத்தான் அப்படி ஆரம்பமாயிற்று என் கவிப் பயணம். அதன் பிறகு அவர் பேச ஆரம்பித்தார். உலகியல், உளவியல், தத்துவ ஞானச் சிக்கல்களைச் சொல்லி அதை ஓஷோ என்ன தோக்கில் , என்ன அடிப்படையில் எவ்வாறு அணுகுகிறார்; அலசுகிறார்.தீர்வுகளை நாமே காண எவ்வாறு வழி திறக்கிறார என்பதை அழகாக அமைதியாக, ஆழமாக அவர் சொல்லிக் கொண்டே வந்தார். அவ்வப்போது, அவர் மேற்கோள் காட்டிய ஓஷோவின் வரிகள் திகைப்பூட்டும் கவிதைகளாகவும், திறவு கோல்களாகவும் இருந்தன. தொடர்ந்து நான் வியந்து கொண்டே வந்தேன். புதிய எண்ணங்களை, ஓஷோ வின் விளக்க மென்னும் உறவு கோல் நட்டு, பாரதியின் பாடலென்னும் உணர்வுக் கயிற்றால் கடைந்து, அழகிய வெண்ணையை எடுத்து நம் முன் வைத்திருக்கிறார் 'மரபின் மைந்தன்' முத்தையா.
-
This book Ettayapuramum Rajaneeshapuramum is written by and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும், மரபின்மைந்தன்.ம. முத்தையா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ettayapuramum Rajaneeshapuramum, எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும், மரபின்மைந்தன்.ம. முத்தையா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,மரபின்மைந்தன்.ம. முத்தையா கட்டுரைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Ettayapuramum Rajaneeshapuramum tamil book.
|