-
சமூகத்தின் அங்கமாகத் திகழும் ஒவ்வொரு தனிமனிதனும் பலவேறு ஆசைகளைக் கொண்டிருக்கிறான். அவனது மனம் அவனை நாலாத்திசைகளிலும் உந்தித்தள்ளுகிறது. புலன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அந்த மனம் அவனைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறது. மானுட வாழ்க்கையே அதனால் மகத்துவம் இழந்து போகலாம். தண்டனைக்கு அஞ்சும் மனிதன், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கிறான். பதினெண் கீழ்கணக்கு நூல்கள் நாலடியாரும் ஒன்று.நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனமையால் இதற்கு நாலடி என்று பெயர் உண்டாகிப் பின் சிறப்புப்பற்றிய விகுதியாகிய 'ஆர்' சேர்ந்து' 'நாலடியார்' ஆயிற்று 'நாலடி நானூறு என்பதும் வேளாண் வேதம்' என்பதும் இந்நூலுக்குரிய வேறு பெயர்கள். ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்னும் பழமொழியில் நால்' எனபது இந்நூலையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இவ்விதம் திருக்குறளுக்கு இணையாக வைத்துப்போற்றப்படும் இந்நூல், கடைச்சங்கக் காலத்தது; சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்டது. இந்த நாலடியார் என்னும் நற்றமிழ் நூலை நவீன அழகியல் கூறுகளுடன் பதிப்பித்து அனைவரையும் படிக்கத்தூண்ட வேண்டும் ஆனாலும், எக்காலத்திற்கும் ஏற்றவையாய், என்றெறெறைக்கும் மாறாதவையாய் மறையாதவையாய்ச் சில அடிப்படை அறங்கள் உள்ளன. அவை புரிந்து கொள்ளப்பட வேண்டும் புரிந்துகொண்டால் வாழ்வில் புதுப்பாதை திறக்கும். அவற்றைப் புரிந்துகொள்ள இந்நூலும் உதவும். அன்பன், பத்மதேவன்.
-
This book Naaladiyaar Moolamum.Uraiyum is written by Kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் நாலடியார் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naaladiyaar Moolamum.Uraiyum, நாலடியார் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், Kavignar Padmadevan, Ilakiyam, இலக்கியம் , Kavignar Padmadevan Ilakiyam,கவிஞர் பத்மதேவன் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Naaladiyaar Moolamum.Uraiyum tamil book.
|